Sunday, December 1, 2013

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் எஸ்டிபிஐ போட்டி ! மாவட்ட பொதுச்செயலாளர் அறிக்கை!




இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா)இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் கனி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடக்கவிருக்கின்ற 2014 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை முடிவு செய்துள்ளது.அதில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியும் இடம் பெற்றுள்ளது.பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவும்,ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழுவும் நியமிக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இராமநாதபுரம்,திருவாடானை ஆகிய தொகுதிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று விட்டது.

 டிசம்பர் 01 ன்று முதுகுளத்தூர்,பரமக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதியை சார்ந்த செயல்வீரர்கள் கலந்து கொள்ளும் பாராளுமன்ற தேர்தல் கலந்தாய்வு  கூட்டம் சாயல்குடியில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமை தாங்குகிறார்.மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது,வர்த்தக அணி மாநில செயலாளர் செரீப் சேட்,எஸ்டிடியூ (தொழிற்சங்கம்)மாநில பொருளாளர் கார்மேகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.     

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.