Thursday, November 7, 2013

சென்னை விமான நிலையத்தில் ஹஜ் பயணிகளுக்கு சிறப்பான வரவேற்பு !கீழக்கரை சேர்மன் உள்ளிட்டோர் வரவேற்றனர்!


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ‘ஹஜ்’ பயணம் மேற்கொள்வதாகும். புனித பயணமாக ஆண்டு தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து செல்கிறார்கள்.



தமிழக ஹஜ் கமிட்டி மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் பயணத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டு 3729 பயணிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து வெளி விவகாரங்களையும் தமிழக ஹஜ் கமிட்டி செய்திருந்தது.

இந்நிலையில் ஹஜ் பயணத்தை சிறப்பாக முடித்துவிட்டு சென்னை திரும்பிய ஹஜ் பயணிகள் முதல் கட்டமாக இன்று 275 பேர் வந்து சேர்ந்தனர்.அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
.
 நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்திறங்கிய ஹஜ் பயணிகளை  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அப்துல் ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், ஹஜ் கமிட்டி தலைவர் முகம்மது ஜான் ,ஹஜ் கமிட்டி உறுப்பினரும்,கீழக்கரை சேர்மனுமாகிய ராவியத்துல் கதரியா,உடன்குடி சேர்மன் ஆயிஷா  உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.

1 comment:

  1. கீழக்கரை அலி பாட்சாNovember 7, 2013 at 6:17 PM

    இன்று பிறந்த பாலகனை போல அனைத்து பாவங்களும் இறைவனின் பெருங் கருணையினால் மன்னிக்கப்பட்டு உங்களின் புனித ஹஜ்ஜும் ஒப்புக் கொள்ள பட்ட நிலையில் (இறைவன் நாடி இருந்தால்) பிறந்த மண்ணிற்கு வருகை தந்த நிலையில் யா யரப்பில் ஆலமீனுக்கு நன்றி கூறி உங்கள் அனைவரையும் சலாத்தை கூறி வரவேற்கிறோம். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகத்தஹூ.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.