Sunday, September 29, 2013

மழை வேண்டி கீழக்கரையில் தொழுகை!ஏராளமான மக்கள் பங்கேற்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.மழை இல்லாத்தால் கிணறுகள் வறண்டு தண்ணீருக்கு கடும் சிரமம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரையில் பழைய குத்பா பள்ளி ஜமாத் சார்பில் மழை தொழுகைக்கு இன்று 29/09/13 மஹதூமியா பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாத்தினரும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் கீழக்கரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறுவர் முதல் பெரியவர் வரை தொழுகையில் பங்கேற்க ஏராளமானோர் குவிந்தனர்.இதனை தொடர்ந்து தொழுகை நடத்தப்பட்டு துஆ செய்யப்பட்டது.
பெண்கள் தொழுகைக்காக தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

3 comments:

  1. நன்மைகளை செய்து துவா செய்திருந்தால் மிகவும் நன்மையா இருதிற்க்கும், முதலில் ஜமாஅத் நிர்வகம் தங்களின் உள்ள குறைகளை சரி செய்து கொள்ள முன்வர வேண்டும் , ஜமாஅத் மக்களின் முனேற்றதிருகும் , நல்ல கலாசாரத்திற்கும் உண்மையாக பாடுபட வேண்டும் , பெண்களின் சாபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளவேண்டும் , தேங்கி கிடக்கும் பெண்களின் மனுக்களை விசாரித்து அவர்களுக்கு உரிய தீர்ப்பு வழங்க வேண்டும் ,ஜமாஅத் நிர்வாகம் தொடர்ந்து பாவம்களை செய்து கொண்டு துவா செய்வதில் ஏதும் நன்மைகள் இருக்குமா ?

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாSeptember 29, 2013 at 10:43 PM

    மாஷா அல்லா. நாம் நாடியபடியே நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. எல்லாப் புகழும் படைத்த ரப்பில் ஆல்மீனுக்கே.பெண்களின் பங்களிப்பு போற்றுதலுக்கு உரியது.

    பெண்களுக்கு தனி இட வசதி,தொழுகைக்கான விரிப்புகள். முதியோருக்கும், முடியாதவர்களுக்கும் இருக்கை வசதி,குடிக்க தண்ணீர் பாக்கெட் போன்றவைகளை அழைப்பாளர்கள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.கூடுதலாக நிகழ்ச்சியை சிறப்பிக்க வருகை தந்த பெரு மக்களை, தன் வீட்டு கல்யாணத்திற்கு வந்தவர்களை அழைப்பது போல் நிர்வாகத்தினர் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றது குறிப்பிட தக்க ஒன்று. அல்ஹம்துலில்லாஹ்.

    ReplyDelete
  3. கீழக்கரை அலி பாட்சாSeptember 30, 2013 at 1:49 PM

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.