Tuesday, April 30, 2013

முஹ‌ம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கணித துறைச் சார்பாக கருத்தரங்கம் !


கல்லூரி முதல்வர் ஜே.முஹம்மது ஜஹாபர் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் எஸ் எம்.ஜே. ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். கல்லூரியின் கணிதத்துறைத் தலைவி பேராசிரியை கே.ராஜம் வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை ஸ்கூல் ஆப் மேதமெடிக்ஸ், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் துறை பேராசிரியர் பாஸ்கரன் பேசுகையில், விஞ்ஞானி கணித மேதை ராமானுஜத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு பயன்படுகிறது. தங்கத்தின் தர விகிதம் மற்றும் எண்கள் கட்டிடத்துறையில் எவ்வாறு பயன்படுகிறது. பின்னம் கைப்பேசியில் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் வடிவியல் கணிதத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்.
பேராசிரியர் பாஸ்கரன், அருப்புக்கோட்டை எஸ். பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறைத் தலைவர் சந்திரமவுலீஸ்வரன் ஆகியோர் வளைவு களின் தன்மைப் பற்றிய வரலாறு மற்றும் பாலங்கள் ஆகியவை அமைக்கும் பொழுது பயன்படுத்த வேண்டிய கணித நுணுக்கங்கள் பற்றி கூறினர். கல்லூரி முதல்வர் ஜே.முஹம்மது ஜஹாபர் தலைமையுரையில், இந்த கருத்தரங்கம் மூலமாக மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து கலந்துரையாடும் போது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் சந்தேகங்களைத் தெளிவுப்பெறச் செய்து படிக்க வேண்டுமெனக் கூறினார்.
கல்லூரி இயக்குநர் எஸ் எம்.ஜே. ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா தனது சிறப்புரையில், கணித மென்பது அறிவியலின் ராணி எல்லா மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் கணிதம் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வாழ்க்கை யின் வெற்றிக்கு அவசியம் என விளக்கினார் பேராசிரியர் குமரன் நன்றியுரை வழங்கினார். பல்வேறுத் துறைத்தலை வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.