Friday, November 2, 2012

கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் சேர்ம‌னை முற்றுகையிட்டு பெண்க‌ள் புகார்!




கீழ‌க்க‌ரை வ‌ட‌க்குதெரு ப‌குதியில் புதிய‌தாக‌ சீர‌மைக்க‌ப்ப‌ட்ட‌  க‌ழிவுநீர் கால்வாயில் சீராக‌ க‌ழிவு நீர் ஓடாம‌ல் கால்வாயில் நிறைந்து சாலையோர‌ம் வ‌ழிந்தோடி சுகாதார‌ சீர்கேடு ஏற்ப‌டுகிற‌து என‌ 20 வ‌து வார்டை சேர்ந்த‌ பொது ம‌க்க‌ள் கட‌ந்த‌ 22ந்தேதி நக‌ராட்சி அலுவ‌ல‌க‌ம் சென்று தலைமை எழுத்த‌ரை முற்றுகையிட்டு கோஷ‌மிட்ட‌ன‌ர்.உட‌ன‌டியாக‌ க‌மிஷ‌ன‌ர் ச‌ம்ப‌ந்த‌ப்பட்ட‌ இட‌த்திற்கு சென்று பார்வையிட்டு விரைவில் இப்பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும் என்றார்.

இந்நிலையில் நேற்று க‌ழிவுநீர் வ‌ழிந்தோடி அப்ப‌குதி முழுவ‌து‌ம் துர்நாற்ற‌ம் வீசிய‌தை தொட‌ர்ந்து வார்டு க‌வுன்சில‌ர் இடிமின்ன‌ல் ஹாஜா வீட்டை முற்றுகையிட்ட‌ன‌ர். அவ‌ர் ந‌க‌ராட்சி பொறியாளர் அறிவ‌ழ‌க‌னுக்கு த‌க‌வ‌ல் தெரிவித்தார் அவ‌ர் பொதும‌க்க‌ளை ச‌மாதான‌ம் செய்ய‌ முய‌ன்றார். ஆனால் அப்ப‌குதி ம‌க்க‌ள் சேர்ம‌ன் இங்கு வ‌ர‌ வேண்டும் என‌ கோரிக்கை வைத்த‌ன‌ர்.இதை தொட‌ர்ந்து உட‌ன‌டியா  ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா ச‌ம்ப‌வ‌ இட‌த்திற்கு வ‌ந்தார்.

அவ‌ரை முற்றுகையிட்ட‌ பெண்க‌ள் உள்ளிட்ட‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் த‌ங்க‌ளின் புகார்க‌ளை சேர்ம‌னிட‌ம் தெரிவித்த‌ன‌ர் உட‌ன‌டியாக‌ இக்குறைக‌ள் தீர்க்க‌ப்ப‌டும் என‌  பொதும‌க்க‌ளிட‌ம் உறுதிய‌ளித்தார் .இதை தொட‌ர்ந்து அப்ப‌குதி ம‌க்க‌ள் ச‌மாதான‌ம் அடைந்த‌ன‌ர்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா கூறுகையில்,
இப்ப‌குதியில் கால்வாய் அமைக்கும் ப‌ணியை எடுத்த‌ ஒப்ப‌ந்த‌தார‌ர் ப‌ணியை தொட‌ர‌ ம‌றுத்து விட்டார் என‌வே வேறு ஒரு ஒப்ப‌ந்த‌ரார‌ரிட‌ம் இப்ப‌ணியை ஒப்ப‌டைத்து க‌ழிவுநீர் கால்வாய் சீர‌மைக்க‌ப்ப‌ட்டு இப்பிர‌ச்ச‌னை தீர்க்க‌ப்ப‌டும் என்றார்.

இது குறித்து முன்னாள் க‌டலாடி ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஹாமீது இப்ராகிம் கூறுகையில்,


க‌ட‌ந்த‌ சில‌ வார‌ங்க‌ள் முன் த‌ன‌து வார்டு ப‌குதியில் தேங்கியுள்ள குப்பைக‌ளை ஏன் அக‌ற்ற‌வில்லை என‌ கேட்ட‌ எங்கள் ப‌குதி க‌வுன்சில‌ர் இடி மின்ன‌ல் ஹாஜா மீது துப்புர‌வு மேஸ்திரி கொலை மிர‌ட்ட‌ல் என‌ பொய் புகார் அளித்த‌தால் காவ‌ல்துறையின‌ர் கைது செய்து சிறையில் அடைத்த‌ன‌ர்.என‌வே அதுபோல் மீண்டும் ந‌ட‌ந்து விட‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌‌ க‌வுன்சி‌லர் ம‌ற்றும் பொதும‌க்க‌ளுட‌ன் நாங்க‌ள் அனைவ‌ரும் இற‌ங்கி போராட‌ வேண்டியுள்ள‌து என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.