Monday, March 19, 2012

கீழக்கரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோய்!பள்ளி குழந்தைகள் பாதிப்பு !



கீழக்கரையில் பள்ளி,மாணவர்களுக்கு பொன்னுக்கு வீங்கி அம்மை பரவுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் பள்ளி குழந்தைகளுக்கு கழுத்தில் வீக்கத்துடன் பொன்னுக்கு வீங்கி அம்மை நோய் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோய் என்பதால் ஏராளமானோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில்,

எங்கள் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் கீழக்கரை நகரில் பெரும்பாலான குழந்தைகள் பொன்னுக்கு வீங்கி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்த நோய் விரைவாக பரவி பெரியவர்களையும் பாதித்து வருகிறது.

இந்நோய் பரவுவதற்கான காரணங்களை கண்டறிந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் பரவாமல் தடுத்து பொதுமக்களை காத்திட வேண்டும் இது குறித்து சுகாதாரத்துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.

ராமநாதபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் உமா மகேஷ்வரி கூறியதாவது: கீழக்கரையில் நோய் பரவியது குறித்து தகவல் தெரியாது. திருப்புல்லாணி மருத்துவ குழுவினரை நேரில் அனுப்பி, நோய் குறித்து கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

2 comments:

  1. அம்மை நோய் உஸ்நம் காரணமாகவே வருகிறது வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் இரண்டு மடங்கு குடித்தாலே இந்த நோயில் இருந்து காத்து கொள்ள முடியும் இதற்க்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து இதை மூட நம்பிகையுடன் அம்மா பார்தது விட்டது என்று விட்டு விடாமல் அருகில் உள்ள மருத்துமனைக்கு சென்று மருந்து எடுத்து கொள்ளுங்கள் மூன்று நாளில் சரி ஆகி விடும் ....M,பக்கீர் ஒழி

    ReplyDelete
  2. அம்மை நோய் உஸ்நம் காரணமாகவே வருகிறது வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் இரண்டு மடங்கு குடித்தாலே இந்த நோயில் இருந்து காத்து கொள்ள முடியும் இதற்க்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து இதை மூட நம்பிகையுடன் அம்மா பார்தது விட்டது என்று விட்டு விடாமல் அருகில் உள்ள மருத்துமனைக்கு சென்று மருந்து எடுத்து கொள்ளுங்கள் மூன்று நாளில் சரி ஆகி விடும் ....பக்கீர் ஒழி

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.