Wednesday, August 31, 2011

ஊரெல்லாம் குப்பை அள்ளுகிறோம் ஆனால் எங்க ஏரியா சுத்தமில்லை......


கீழக்கரையில் பல் வேறு இடஙகளில் சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்துள்ளன .இதில் எங்கள் பகுதியும் விதிவிலக்கல்ல என்கினறனர் துப்புரவு பணியாளர்கள்.
கீழக்கரை நகராட்சி 2வது வார்டுக்கு உட்பட்ட அண் ணா நகரில் துப்புரவு தொ ழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு கடந்த 2 மாதங்களாக குப்பைகளை எடுக்காமல் துர்நாற்றம் வீசுகிறது.
அப்பகுதியில் மூக்கை பிடித்துக்கொண் டே செல்லும் அவல நிலை உள்ளது. அடுத்த வாரம் இப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள்ளாவது குப்பைகளை அகற்றி துப் புரவு செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக் கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் கூறுகையில், ‘ஊரை எல்லாம் நாங்கள் துப்புரவு செய்கிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதியை துப் புரவு செய்வதற்கு எங்கள் மேஸ்திரி அனுமதிக்க மறுக்கிறார்’ என்றார்.
இதுகுறித்து நகராட்சி அலுவலர் (மேஸ்திரி) கூறு கையில், ‘ஆட்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் .நகராட்சிக்கு சொந்தமான ஒரு டிராக்டர் உட்பட மூன்று டிராக்டர் களை வைத்து குப்பை அள்ளுகிறோம்.இவை நகர் முழுவதும் சேரும் குப்பைகளை அள்ளுவதற்கே நேரம் சரியாகி விடுகிறது. அதனால்தான் அந்த பகுதியில் குப்பைகளை அள்ள முடியவில்லை’ என்றார்.

Monday, August 29, 2011

ஹமீதிய ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இப்தார் விழா


ஹமீதிய ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இப்தார் விழாவில் முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர்,பள்ளியி முன்னாள் தாளாளர் ஹெச்.எஸ் செய்யது அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

வேலை வாய்ப்பு முகாமில் இடிஏ அஸ்கான் (கத்தார்) நிறுவனத்திற்கு சதக் பாலிடெக்னிக் மாணவர்கள் 57பேர் தேர்வு !


கல்லூரி முதல்வர் அலாவுதீன்


கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு பிரிவு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இம் முகாமுக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். இ.டி.எ.அஸ்கான் கத்தார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலர்கள் திருவழிவேந்தன், பாலமுருகன், இம்ரான் ராஜா ஆகியோர் நேர்முகத் தேர்வை நடத்தி தங்கள் நிறுவனத்தைப் பற்றியும், உற்பத்தி பொருள்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இம் முகாமில், 57 மாணவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு ரூ. 18ஆயிரமும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 12 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். வளாகத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பாலிடெக்னிக் கல்லூரி தொழில் பயிற்சி நிலையத்தின் முதல்வர் எம்.அப்துல்காதர், வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்னியில் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவருமான அ. சேக் தாவூத் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

பாராட்டுக்குறிய கீழக்கரை வங்கி ! பள்ளிகளுக்கு இலவச மின் விசிறி !


கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1ம் நம்பர்க்கு 3ம், திருப்புல்லாணி மேலபுதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 4ம் ,புல்லந்தை ஊராட்சிக்கு தொடக்கப்பள்ளிக்கு 3ம் மொத்தம் 10 மின்விசிறிகள் இலவசமாக கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் தங்கவேலு வழங்கினார்.

இது குறித்து வங்கி மேலாளர் தங்கவேலு கூறுகையில் , எங்கள் வங்கி சார்பாக ஊராட்சி பள்ளிகளுக்கு மின்விசிறிகள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மதுரை உதவி பொது மேலாளர் தெய்வ சேனாதிபதி உத்தரவிட்டதின் பேரில் மின்விசிறிகள் வழ.ங்கப்பட்டது என்றார்

Saturday, August 27, 2011

பள்ளி வேன் - லாரி மோதல் ! கீழக்கரை மாணவர்கள் ,ஆசிரியை உள்பட 8பேர் காயம்








































கீழக்கரை நுழைவு வாயில் அருகில் பள்ளி வேனும் செங்கல் லாரியும் மோதி கொண்டதில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் படிக்கும் கீழக்கரையை சேர்ந்த மாணவர்கள் முகம்மது பர்ஹான்(8),லிங்கேஸ்வரன்(9),ரஹீம்(8), ரிபாத்(10) முஹைபீர்(16),ரபீக்(13) ஆகிய மாணவர்களும் ஆசிரியை ஹசீபா(21) ராமநாதபுரத்தை சேர்ந்த டிரைவர் முருகன்(40), ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் காவலர்கள் பொதுமக்கள் உதவியுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கும், கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


இது குறித்து இப்பகுதியை சேர்ந்த இப்ராகிம் கூறுகையில்,இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.சிறுவர்களும் வாகனத்தை இயக்குகின்றனர். ஓட்டுநர்கள் பெரும்பாலானோருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை மேலும் ,தாறுமாறாக வாகனத்தை இயக்குவது , அதிக வேகத்தில் ஓட்டுவது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது.பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்

Thursday, August 25, 2011

பைக் - ஆட்டோ மோதல் ! கீழக்கரை வாலிபர் உள்பட 3 பேர் படுகாயம் !




கீழக்கரை அருகே முள்ளுவாடி செல்லும் சாலை அருகே ஆட்டோவும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கீழக்கரை - ஏர்வாடி சாலையில் கீழக்கரை நோக்கி பைக்கிலும், புல்லந்தையை நோக்கி ஆட்டோவிலும் சென்று கொண்டிருந்தனர்.

இரு வாக‌ன‌ங்க‌ளும் நேருக்கு நேர் மோதி கொண்ட‌தில் பைக்கில் சென்ற‌ கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ அல்லாபிச்சை ம‌க‌ன் அமீன்(20) ,ஆட்டோவில் சென்ற‌ புல்ல‌ந்தையை சேர்ந்த‌ இருவர் உள்பட3 பேர் ப‌டுகாய‌ம‌டைந்த‌ன‌ர்.

இது குறித்து போலீசார் விசார‌ணை ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.




Wednesday, August 24, 2011

இஸ்லாமியர்களுடன் என்றென்றும் நட்பு தொடரும் ! கீழக்கரையில் சரத்குமார்.எம்.எல்.ஏ உறுதி !




கீழக்கரை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சி ரோட்டரி சங்க தலைவர் செய்யது இப்ராகிம் தலைமையில் இன்று மாலை கீழக்கரை கைராத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் .எம்.எல்.ஏ கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது,
இஸ்லாமியர்களுடன் நீண்ட காலமாக எனக்கு நெருங்கிய நட்பு உள்ளது . அது என்றென்றும் நீடிக்கும் ,நிலைத்திருக்கும் .மேலும் எனக்கு கீழக்கரையில் பாக்கர் உள்பட நெருங்கிய நண்பர்கள் பலர் உள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில் கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம்,மேல்நிலை பள்ளி தாளாளர் சாதிக்,ரோட்டரி சங்க செயலாளர் சுப்பிரமணியன்,பட்டயத்தலைவர் அலாவுதீன்,டாக்டர் ஜவாஹிர் ஹீசைன்,அ.இ.ச.ம.க மாவட்ட செயலாளர் அப்துல் பாசித்,நகர் செயலாளர் பந்தே நவாஸ்,மாவட்ட தலைவர் சுப.கோவிந்த்,பொருளாளர் பூமிநாதன்,திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஆனந்த்,மற்றும் நகர் பொருளாளர் ஹக்கீம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சரத்குமார் வருகையை முன்னிட்டு டி.எஸ்.பி முனியப்பன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.





Tuesday, August 23, 2011

கீழக்கரையில் மூன்று அமைப்புகள் இணைந்து நடத்திய உதவி வழங்கும் நிகழ்ச்சி !




கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கம், மக்கள் சேவை அறக்கட்டளை, மற்றும் எம்.எம்.கே முகம்மது இப்ராகிம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இப்தார் நிகழ்ச்சியும்,ஏழைகளுக்கு இலவச வேஷ்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சியும் தனியார் உணவகத்தில் அமானுல்லா தலைமயில் ந்டைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காஜி ஸலாஹீதீன் அலீம், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் அப்துல் காதர்,எம்.எம்.கே அறக்கட்டளை சார்பில் முகம்மது காசிம் மற்றும் நகர் மன்ற தலைவர் பசீர் அகமது, அனைத்து ஜமாத் செயலாளர் முகைதீன் தம்பி, ஆகியோர் கலந்து கொண்டு உதவி பொருள்களை வழங்கினர்.
செய்யது இப்ராகிம், ஆறுமுகம், ஜமால் அசரப், திமுக இளைஞர் அணி செயலாளர் சுல்தான் செய்யது இப்ராகிம், மூர் ஹசனுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நுகர்வோர் இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஸ்னன் அனைவரையும் வரவேற்றார். ஜஹாங்கிர் அரூஸி,கைராத்துல் ஜலாலியா பள்ளியில் தாளாளர் சாதிக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இறுதியாக பொருளாளர் முஹப்பதுல்லா நன்றி கூறினார்.

காரைக்குடி ,கீழக்கரை வழியாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் பாதை ! அப்துல் ரஹ்மான் எம்பியிடம் கோரிக்கை மனு !



காரைக்குடியிலிருந்து ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க மக்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். காரைக்குடி-தூத்துக்குடி வரை அகல ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகள் மட்டுமே நடந்தது. ஆயத்தப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இப்பகுதிகளுக்கு ரயில் பாதை என்பது கனவாகி விடுமோ என்று மக்கள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கீழக்கரை சமூக நல நுகர்வோர் சேவை இயக்கத்தின் செயலாளர் தங்கம் ராதாகிருஷ்ணன் என்பவர் மே மாதம் 19ல் தகவல் உரிமை சட்டம் முலம் இத்திட்டம் குறித்த நிலையை அறிய கேட்டதின் பேரில் புதிய ரயில் பாதை பணிகளின் நிலை குறித்து ரயில்வே துறை அவருக்கு அனுப்பிய கடிதத்தில், கீழக்கரை வழியாக காரைக்குடி-கன்னியாகுமரி ரயில் பாதை சர்வே முடிந்த நிலையில் இதன் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தட வரை படம் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இப் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து ரயில்வே போர்டுக்கு அனுப்பப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது தற்போது இத்திட்டம் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துமாறு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான்.அவர்களிடம் கீழக்கரை ஹமீது யாசின் www.keelakaraitimes.blogspot.com மற்றும்www.keelakarai.in,www.keelakarai.com ஆகிய வலைத்தளங்கள் சார்பாக கோரிக்கை மனு கொடுத்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தேவையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அப்துல் ரஹ்மான்.எம்.பி உறுதியளித்தார்

கள்ள தொடர்பு ! மனைவியை கொன்று அரிவாளுடன் கணவன் போலீசில் சரண் !


ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தில் கள்ள காதலுனுடன் வீட்டிற்கு வந்த மனைவியை கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.


ராமாநாதபுரம் மாவட்டம் ஏர்வாடெஇ அடஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மீனவத் தொழிலாளி முனியாண்டி(25)
இவரது மனைவி நம்பிசெல்வி(25) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளன‌
இந்நிலையில் நம்பிசெல்விக்கு அதே கிராமத்தை சேர்ந்த சீனி மகன் முனியசாமி(25) என்பவருடன் கள்ள தொடர்பு
இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த கணவன் பல முறை மனைவியை கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு கள்ள காதலனுடன் வெளியேறிய நம்பிசெல்வி நேற்று முன் தினம் மாலை கள்ள காதலனுடன் வீட்டிற்கு வந்தாராம் அப்போது வீட்டில் இருந்த கணவர் முனியாண்டி கடும் கோபமடைந்து அரிவாளால் மனைவியை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ள காதலன் தப்பி ஒடி விட்டார்.
உடனே முனியாண்டி அரிவாளுடன் ஏர்வாடி காவல் நிலையத்தில் சரண் அடந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரித்து வருகிறார்


தாசீம் பீவி அப்துல் காதர் கல்லூரியில் வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாம்


கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவிகளுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் சுமையா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுமையா தலைமையுரையாற்றினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்புரையாற்றினார்.மேலும் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி விலங்கியல் துறை துணை பேராசிரியர் ஆப்தீன் மாணவிகளுக்கு முதுகலை கல்வி பற்றிய அவசியமும் ,வேலை வாய்ப்பிற்கான வழிமுறைகளையும் எடுத்து கூறினார்.இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யோகலட்சுமி நன்றி கூறினார்.

படம் : கல்லூரி முதல்வர் சுமையா தாவூத்


Monday, August 22, 2011

தொடர் செய்தி எதிரொலி ! தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் !


ழக்கரை ஸ்ரீநகரில் நான்கு குடிசைகள் எரிந்து சாம்பலானது. பல் வேறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து இது தொடர்பான செய்தி வெளியானதை தொடர்ந்து அரசின் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

இதுகுறித்து இப்பகுதிக் கவுன்சிலர் ராஜா கூறுகையில் , தாசில்தார் சுந்தரமூர்த்தி,மண்டல துணை வட்டாட்சியர் தமீம் விஏஓ பாலையா ஆகியோர் எங்கள் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ5000ம் வேட்டி ,சேலை மறறும் பொருள்கள் வழங்கினார் முன்னதாக‌ ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ நேரில் உதவி பொருள்கள் வழங்கியது குறிப்பிடதக்கது.

பட விளக்கம்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தாசில்தார் சுந்தரமூர்த்தி நிவாரண தொகை வழங்கினார். உடன் கவுன்சிலர் ராஜா உள்ளார்

கீழக்கரையில் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை !


கீழக்கரை குரு டைமண்ட் ஆடவர் சுய உதவிக்குழு சார்பில் கீழக்கரை அண்ணா நகரில் திருப்புல்லாணி ஒன்றிய தொடக்க ப்பள்ளி எண்2 ல் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் விழா நடைபெற்றது

சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி வாழ்த்துரை வழங்கினார்
செயலாளர் பாஸ்கரன்,உதவி செயலாளர் வி.ராஜேந்திரன் ,பொருளாளர் சி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
விழா நிறைவில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜய லட்சுமி நன்றி கூறினார்

துபாயில் ராமநாதபுரம் சின்னக்கடை பாசிப்பட்டறை ஜமாத் சார்பில் இப்தார் நிகழ்ச்சி



இராமநாதபுரம் சின்னக்கடை பாசிப்பட்டரை ஜமாஅத்தினர் துபாய் சோனாப்பூரில் அமைந்துள்ள பவர் கிளினிங் நிறுவன தொழிலாளர் முகாமில் 19.08.2011 வெள்ளிக்கிழமை மாலை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் பாசிபட்டரை தெரு ஜமாஅத் நிர்வாகி கலீம் அனைவரையும் வரவேற்றார். காயிதே மில்லத் பேரவை முதுவை ஹிதாயத் , கீழக்கரை யாசின் , பெரியமுகல்லம் ஜமாஅத் அப்துல் மாலிக் மற்றும் சின்னமுகல்லம், ஹாஜிமர்தெரு , கொல்லம்பட்டரை தெரு ஜமாஅத் துபாய் , அபுதாபி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர் . முஸ்லிம் லீக் பரகத் அலி மற்றும் மாணவர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
ரஸ்புதீன், ரகுமாதுல்லாஹ் , முபீன் , பரக்கத் அலி மற்றும் ஜமாஅத் இளைஞர்கள் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர் . இவ்விழாவில் ஏராளமானோர் கல்ந்து கொண்டனர். இதுகுறித்து முதுவை ஹிதாயத் கூறுகையில் , சிறப்பான ஏற்பாட்டை செய்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நன்றி என்றார்

தலை இல்லாமல் இறந்து கிடந்த மயில் ! போலி மந்திரவாதிகள் செயல் ! பொது மக்கள் குற்றச்சாட்டு


கீழக்கரை அருகே முள்ளுவாடி பஸ் நிலையம் அருகில் தலையில்லாத நிலையில் மயில் இறந்து கிடந்தது. மயிலின் தோகைகள் பிடுங்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்தியாவின் தேசிய பறவையான மயில் இனத்தை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
தமிழகத்தில் காடுகளில் வளர்ந்து வந்த மயில்கள் தற்போது காடுகள் அனைத்து அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாறிவரும் சூழ்நிலையில் பல பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து கீழக்கரை,ஏர்வாடி,திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் ஏராளமான மயில்கள் சுற்றி திரிகிறது. இந்நிலையில் நேற்று காலை கீழக்கரை ,ஏர்வாடி செல்லும் சாலையில் முள்ளுவாடி பஸ் ஸ்டாப் அருகில் குப்பைகளுக்கு நடுவில் தலையில்லாத நிலையில் மயில் இற்ந்து கிடந்தது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில் , போலி மந்திரவாதிகள் சிலர் மயில் தலையை வெட்டி பரிகாரம் செய்தால் குடும்ப பிரச்சினைகள் தீரும் என்று அவர்களை நாடி வரும் சிலரிடம் கூறி இது போன்ற மயில் தலையை அறுக்கும் கொடூர செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அடிக்கடி இது போன்று தலையில்லாத மயில்களை காண முடிகிறது உடனடியாக வனத்துறை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்

Sunday, August 21, 2011

கீழக்கரை மகளிர் காவல் நிலையத்துக்கு முதன்முறையாக‌ இன்ஸ்பெக்டர்


கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்கு முதன்முறையாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்படுள்ளார்
நீண்ட காலமாக கீழக்கரை மகளிர் காவல் நிலையத்திற்கு தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்
என்று கோரிக்கை இருந்து வந்தது.இந்நிலையில் தற்போது புதியதாக திருநெல்வேலியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த விமலா என்ற அதிகாரி பதவி உயர்பெற்று இன்ஸ்பெக்டராக கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் பொறுப்பேற்று கொண்டார்.

கீழக்கரை அருகே தீவிபத்து !ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏ உடனடி உதவி !(படங்கள்)




கீழக்கரை அருகே ஸ்ரீநகர் என்ற இடத்தில் அமுதா பாலு என்பவர் நான்கு குடிசைகள் அமைத்து வாடகைக்கு கொடுத்திருந்தார். வசந்தா, ராஜா, ரத்தினவள்ளி ,குமார் ஆகியோர் நான்கு குடிசையில் குடியிருந்து வந்தனர்.இந்த குடிசைகளில் நேற்று நடந்த தீ விபத்தில் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்து ரூ2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப் பட்டவர்களை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் உடனடியாக‌ நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கி கீழக்கரை தமுமுக சார்பாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார். அவருடன் கீழக்கரை தமுமுக நகர் நிர்வாகிகள் ஹுசைன், உஸ்மான் ,ஜெய்னுல்அப்தீன், முஸ்தகீன், பக்கர் மாவட்ட பொருளாள‌ர் முஜீபு ரகுமான் ஆகியோர் வந்திருந்தனர்.

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.வின் உடனடி நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாரட்டினர்.

இது குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் முக்கிய பிரமுகர் கீழை ஜமீல் கூறியதாவது, இதுவரை பணியாற்றிய எம்.எல்.ஏக்களில் மிகச் சிறப்பான பணியினை சகோதரர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் செய்து வருகிறார்கள். அல்லாஹ் அவர்களது பதவி காலம் முழுவதும் இதே சுறுசுறுப்பினை வழங்கி பணியாற்ற உதவி செய்ய வேண்டும் என்றார்.

Saturday, August 20, 2011

கீழக்கரை கல்லூரியில் நீதிபதி கலந்து கொண்ட மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி !



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இநிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை ஏற்று வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் சிறப்பு இயக்குநர் யூசுப் சாஹிப்,சென்னை ஏ.ஜே கல்லூரியின் இயக்குநர் ஹபீப் சதக்கதுல்லா,கீழக்கரை டவுன் காஜி காதர்பக்ஸ் ஹீசைன்,மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவிசந்திர ராமவன்னி, மக்கள் சேவை அறக்கட்டளை இயக்குநர் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சதக் கல்லூரிகளின் முதல்வர்கள் முகம்மது ஜாபர்,அபுல் ஹசன் சாதலி மற்றும் அரபி கல்லூரியின் முதல்வர் இலியாஸ் கீழக்கரை பள்ளிகளின் தாளாளர்கள் ,தலைமை ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜீம்மா பள்ளி பொருளாளர் சேக் தாவுத், உறுப்பினர்கள் ஜாகிர் உசைன் ,தமீமுல் அன்சாரி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்


Friday, August 19, 2011

கீழக்கரையில் இப்தார் நிகழ்ச்சி ! 24ந்தேதி சரத்குமார்.எம்.எல்.ஏ வருகை !


ரோட்டரி சங்கமும் ,சமத்துவ மக்கள் கட்சியும் இணைந்து வரும் 24ந்தேதி அன்று இப்தார் நடத்த உள்ளார்கள்.கீழக்கரையில் நடைபெறும் இந்நிகழ்வில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்.எம்.எல்.ஏ கலந்து கொள்ள உள்ளார்.இதில் கலந்து கொள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நோன்பின் மாண்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அனைவரும் கலந்து கொண்டு சிறபிக்க வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்

இச்செய்தியை சமகவின் கீழக்கரை நகர் செயலாளர் நவாஸ் வெளியிட்டுள்ளார்.


Wednesday, August 17, 2011

கீழக்கரையில் வற்றாத ஜீவ நதியாக சாலைகளில் கழிவு நீர்! பொது மக்கள் அவதி (படங்களுடன்)

கீழக்கரை புது தெருவில்

கவுன்சிலர் ஹமீது கான்
ஓடக்கரை பள்ளியை சேர்ந்த பேங்க்
நிரோஸ்கான்

வடக்கு தெரு சாலையில்


எஸ் .எண் .தெருவில் சாலைகளில் வழிந்தோடும் கழிவு நீர்

கீழக்கரையில் குப்பை கொட்டும் பிரச்சினையால் குப்பைகள் நிறைந்து சுகாதார சீரழிவில் சிக்கி தவிக்கிறது.தற்போது மற்றுமொரு பிரச்சினையாக நகரெங்கும் சாக்கடை தண்ணீர் வழிந்தோடி நகர‌த்தில் பல இடங்கள் அசுத்தமாக காணப்படுகிறது.
கீழக்கரையில் பல இடங்களில் சாக்கடை நீர் வெளியேற்றுவதற்காக கட்டப்பட்டுள்ள கால்வாய்களில் உடைப்பு மற்றும் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் தேங்கி நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நகராட்சியில் புகார் செய்தால் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வள்ள்ல் சீதக்காதி சாலையில் கடை நடத்தும் ஜமீல் கூறியதாவது, இது தெருக்களில் தான் கழிவு நீர் ஓடி கொண்டிருந்தது தற்போது மெயின் ரோடில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.உடனடி நடவடிக்கை தேவை என்றார்.

கிழக்கு தெரு முகம்மது காசிம் அப்பா தர்ஹா பகுதியை சேர்ந்த நிரோஸ்கான் கூறியதாவது, எங்கள் பகுதியில் சாக்கடை நீர் தான் முதன்மை அடையாளமாக மாறும் அளவுக்கு கழிவு தேங்கி நிற்கிறது என்றார்.

ஓடக்கரை பள்ளியை சேர்ந்த பேங்க் கூறுகையில் , கழிவு நீர் பிரச்சினை தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும் என்றார்.


Tuesday, August 16, 2011

மின்னல் தாக்கி பாசமான வளர்ப்பு ஆடுடன் உயிரிழந்த பெண்

www.keelakarai.in

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் ஏர்வாடி அருகே கொம்பூதி கிராமத்தில் தான் வளர்த்து வந்த ஆடுக்கு உணவு வைக்க சென்றார் அம்சவல்லி(40),அச்சமயத்தில் பலத்த இடியுடன் , மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அம்சவல்லி இறந்தார். இந்நிலையில் இவ்விபத்தில் அவர் வளர்த்த ஆட்டு குட்டியும் அவர் அருகிலேயே உயிரிழந்தது.தினமும் வளர்ப்பு ஆடு சாப்பிட்ட பின் தான் தான் அம்சவல்லி உணவு அருந்துவாராம் சாவிலும் கூட‌ த‌ன‌து வ‌ள‌ர்ப்பு ஆட்டு குட்டியை பிரியாம‌ல் உயிரிழ‌ந்த‌து அப்பகுதி மக்களை ம‌ன‌ வேத‌னையில் ஆழ்த்திய‌து.


சமக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக நவாஸ் ?

சமகவின் கூட்டத்தில் நிரோஸ்கான் இளைஞர் அணி செயலாளாராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது



கீழக்கரை அகில இந்திய சமுத்துவ கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்திற்கு சமக மாவட்ட செயலாளர் அப்துல் பாஸித் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுப.கோவிந்தன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முனியசாமி,மாவட்ட பொருளாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் கெஜேந்திரன் கீழக்கரை நகர் தலைவராகவும்,பந்தே நவாஸ் செயலாளாராகவும், அப்துல் ஹக்கீம் பொருளாளராகவும், நிரோஸ்கான் இளைஞர் அணி செயலாளாராகவும்,ஜாகிர் உசைன் துணை செயலாளராகவும்,அஜீஸ்கான் மீனவர் அணி செயலாளாராகவும் தேர்வு செய்யபட்டனர்.

இத்தேர்வின் போது மாநில பிரதிநிதி தாஜீதீன்,திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் ஆனந்த் மற்றும் மற்றும் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வருகிற நகராட்சிக்கான தேர்தலில் கீழக்கரை நகராட்சியில் சமக போட்டியிட்டால் தலைவர் வேட்பாளராக சமக சார்பில் நகர் செயலாளர் நவாஸ் நிறுத்தப்படுவார் என்று சமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட விளக்கம் : கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாஸித், நகர் செயலாளர் நவாஸ் (கையில் மைக் வைத்திருப்பவர்),பொருளாளர் நிரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்





























Thursday, August 11, 2011

கீழக்கரை மருத்துவமனையில் கலெக்டர் அதிரடி ! பொதுமக்கள் பாராட்டு


கீழக்கரைக்கு இன்று காலை திடீர் விசிட் அடித்த மாவட்ட கலெக்டர் அருண்ராய் நகராட்சிக்கு வந்தார். அங்கு நடைபெற்று கொண்டிருந்த அலுவலக பணிகளை பார்வையிட்டார் பிறகு நகராட்சி செயல் அலுவலர் போஸை உடன் அழைத்து சென்று அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள உள் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள கழிப்பிடங்கடங்களை பார்வையிட்டு அதிருப்தி தெரிவித்தார் பின்னர் ஊழியர்களை அழைத்து சரியாக வேலை செய்யவில்லை என்றால் வேறு ஊருக்கு மாற்றி விடுவேன் என்று எச்சரித்தார்.மேலும் நோயாளிகளுக்கு சமைத்து வைத்திருக்கும் உணவுகளை பார்வையிட்டு ,சாப்பிட்டு சோதனை செய்தார்.முட்டை கொடுப்பதில்லையா என்று கேட்ட பின் அவித்த முட்டையை காண்பித்த்னர் அதில் ஒரு முட்டையை சோதனைக்காக பார்வையிட்ட பின் பழைய முட்டையாக இருப்பதை கண்டு கோபம் கொண்டு ஏ ன் முட்டை இந்த கலரில் உள்ளது என்று கேட்டு தலைமை மருத்துவ அதிகாரியை அழைத்து நீங்கள் பார்ப்பதில்லையா என்று கேட்டு இனிமேல் இப்படி நடந்தால் அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

கலெக்டரிடம் திடீர் விஜயம் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,

( தோணி பாலம் அருகில் குப்பை கொட்டும் இடத்தில் கோர்ட் உத்தரவின் படி சுற்று சுவர் கட்டுவதற்கு தில்லையேந்தல் ஊராட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து பணியை செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர் ஆகையால் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று 15-07-11 அன்று கீழக்கரை காவல் நிலையத்தில் நகராட்சி சார்பாக புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் இல்லை அதேபோல் புதிய பஸ் நிலையம் அருகில் கழிவு நீர் தேங்குவதை தடுப்பதற்கு புதிய குழாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் இது குறித்தும் நகராட்சி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது )

இரணடு புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக வந்தேன் இது குறித்து எஸ்.பி யிடம் பேசி பாதுகாப்புடன் இரண்டு பணிகள் நடப்பதற்கும் ஆவண செய்யப்படும் என்றார்.

மாவட்ட கலெக்டரின் ஆய்வு பணி குறித்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பட விளக்கம் : கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரப்படும் முட்டையை ஆய்வு செய்து தலைமை மருத்துவ அதிகாரியை எச்சரிக்கை செய்தார்.

Sunday, August 7, 2011

கீழக்கரையில் பொது கிணறு , ஊரணிகள் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை !ஆணையாளர் தகவல்

கீழக்கரை, ஆக. 6: கீழக்கரை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில், பல கிணறுகள் மற்றும் ஊருணிகள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கீழக்கரையில் 25 ஆண்டுகளுக்கு முன் 95 பொதுக்கிணறுகள், 10 ஊருணிகள் இருந்தன. கிணற்றுக்கு அருகே வீடு, கோயில், மசூதி, பள்ளிகள் கட்டுபவர்கள் அருகே உள்ள பொதுக் கிணற்றையும், ஊருணியையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்து கட்டிவிடுகின்றனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுக்கிணறுகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நில மோசடி வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சம்பந்தமாக கீழக்கரை நகராட்சி ஆணையர் போஸ் கூறியது: கீழக்கரையில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்பு சம்பந்தமாக ராமநாதபுரம் வட்டாட்சியருக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம்.
அது சம்பந்தமாக, கீழக்கரைக்கு வரும்போது நில அளவையர்கள் மூலம் கிணறுகள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு முறையான நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த ரியாசுதீன் கூறுகையில் , நடவடிக்கை வரவேற்கதக்கது. அதே சமயம் ஒரு சிலர் இதை காரணமாக வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.