Sunday, December 11, 2011

தாசிம் பீவி கல்லூரிக்கு மலேசியாவின் சரவாக் முதல்வர் ரூ.7.50 லட்சம் நன்கொடை !







தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் கீழக்கரை வந்துள்ள மலேசியாவின் சரவாக் மாநில முதல்வர் அப்துல் தையூப் முகம்மதுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் சரவாக் மாநில இஸ்லாம் இயக்க வளர்ச்சி துறை அமைச்சர் அலிஹசன்,இணை அமைச்சர் தாவூது அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்

சர‌வாக் மாநில‌ முத‌ல்வ‌ர் பேசுகையில் ,இந்த‌ க‌ல்லூரியில் ப‌யிலும் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ மாண‌விக‌ளை ச‌ந்திப்ப‌து மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌ உள்ள‌து. பெண்க‌ள் அதிக‌ அள‌வில் க‌ல்வி கற்க‌ வேண்டும் உல‌மய‌மாக்க‌ல் ந‌ம்மை நெருக்க‌மாக‌ ஆக்கி விட்ட‌து.இந்தியா க‌ணிணி துறையில் ந‌ல்ல‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டுள்ள‌து.இந்தியா ம‌னித‌ வ‌ள‌த்துறையில் வ‌லிமையாக‌ உள்ள‌து. இது ஆர‌ம்ப‌ம் தான் இன்னும் அதிக‌ம் சாதிக்க‌ வேண்டியுள்ள‌து.உல‌க‌ம‌ய‌மாக்க‌ல் மூல‌ம் இந்த் க‌ல்லூரியும் எங்க‌ள் நாட்டு ப‌ல்கலைக‌ழ‌க‌ங்க‌ளோடு இணைந்து ப‌ணியாற்றும் வாய்ப்பை பெறுகிற‌து. மேலும் இப்ப‌குதி பெண்க‌ளை மேம்ப‌டுத்த‌ பாடுப‌டும் இக்க‌ல்லூரி நிர்வாக‌த்திற்கு என‌து பாராட்டுக்க‌ளை தெரிவித்து கொள்கிறேன்.எங்க‌ள் நாட்டின் சார்பாக‌ உங்க‌ள் ஆடிட்டோரித்திற்கு ரூ 7.50 ல‌ட்ச‌ம் ந‌ன்கொடையாக‌ வ‌ழ‌ங்குகிறேன். உல‌க‌ம் மிக‌வும் சுருங்கி விட்ட‌து நாம் ந‌ம்மை த‌யார்ப‌டுத்தி கொள்வோம்.இவ்வாறு அவ‌ர் பேசினார்.
க‌ல்லூரியின் துணை முத‌ல்வ‌ர் நாதிர‌பானு க‌மால் ந‌ன்றி கூறினார்.

1 comment:

  1. Mashaa Allah ,a gr8 news abt my college...iam vry happy to b a part of alumini in tbak college....Praising d lord for ds current seccuess n surely pry 4 d future sucess....Kathira Musfica bsc (IT).

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.