Sunday, September 25, 2011

கீழக்கரையில் இலங்கையை சேர்ந்தவர் கைது ! 10 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன !



கீழக்கரை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த இளைஞர்


வெளிநாட்டை சேர்ந்த சிலர் கீழக்கரை பகுயில் தங்கியிருந்து கடத்தலில் ஈடுபடுவதாக க்யூ பிராஞ்சுக்கு தகவல் கிடைத்தது அதனடிப்படையில் கீழக்கரை வள்ளல் சீதக்காதி பகுதியில் அமைந்துள்ள விடுதியில் சோதனை மேற்கொண்டதில் அங்கிருந்த இலங்கை பத்தளம் மாவட்டம் மடவாக்குளத்தை சேர்ந்த சேர்ந்த முகம்மது தம்லிக் என்பவரின் மகன் ஹசனின்(27) என்பவர் பிடிபட்டார் .இவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் தங்கியிருந்துள்ளார் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்துபோலி அடையாள அட்டையுடன் 10க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் கைப்பற்றபட்டதாகவும் இதன் மூலம் அவர் வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு பேசியிருப்பது தெரிய வந்தது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.இவர் கடத்தலில் ஈடுபட்டாரா ,ஹவாலா பண பரிமாற்றத்தில் சம்பந்தபட்டிருப்பாரா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

1 comment:

  1. "அணிவதற்கு கால்களில் செருப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இவ்வளவு ஏன்? இரண்டு கைகளுமே இல்லாவிட்டாலும்கூட பரவாயில்லை, ஆனால், இரண்டு மொபைல் போன்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவைப் பொறுத்தவரை, அவன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவனாக கருதப்படுவான்!!" இதுதான், நமது பொருளாதார மேதை மன்மோகன் சிங் கண்டுபிடித்த உலக தாராளமைய பொருளாதாரத்தின் வெளிப்பாடு. இதனை மறுத்து கருத்து கூறினால், அது அறியாமையின் வெளிப்பாடு!!!

    ஒருவன் பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்து இருக்கிறான் என்றால், நிச்சயமாக, அவன் சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான் என்பதை விளக்கிக் கூற வேறு எதுவும் தேவையில்லை.

    கள்ளக் கடத்தலும், ஹவாலா பணப் பரிமாற்றமும் "ஹலாலான தொழில்தானே!?" என்று வாதாடுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அவற்றையெல்லாம் செய்யாதவனுக்கு "பிழைக்கத் தெரியாத இளிச்ச வாயன்" என்று ஒரு செல்லப் பெயரும்(!!??)கூட உண்டு. அதாவது அம்மணமாக திரியும் ஊரில், மானத்தை மறைக்க கோவணம் கட்டிக் கொண்டு திரிபவனை கிறுக்கு பிடித்தவன் என்று அழைப்பதைப் போல!!!

    இவனை மட்டுமல்ல, இவன் சம்பந்தப்பட்ட பலரையும் கைது செய்து, "விசாரிக்க வேண்டிய விதத்தில்(!!)" விசாரித்தால், நம் ஊரில் மட்டுமல்ல, நம் நாட்டிலும் பல சமூக விரோத செயல்கள் குறையும்.

    குல்லா அணிந்து, தாடி வைத்திருப்பவனுக்கு திருட்டு விசிடி விற்பதையும், ஹவாலாவையும் விட்டால் வேறு என்ன தொழில் தெரியும்? என்று மற்றவர்களால் நம் மீது குத்தப்பட்டு இருக்கும் அவப்பெயரும் நீங்கும்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.