Friday, May 24, 2013

கீழ‌க்க‌ரையில் பெண்ணை கேலி செய்த‌தாக‌ ஒருவ‌ர் கைது!


கீழக்கரையில் இளம்பெண்ணை கேலி செய்ததாக‌ புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கோகிலா(24). அப்பகுதியில் உள்ள கடை க்கு சென்று கொண்டிருந்த இவரை, கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌  முகமது ஹமீது(26) மற்றும்  ஜமீல் ஆகியோர் டூவீலரில் வந்து வழிமறித்து கேலி செய்த‌தாக‌  கோகிலா கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இத‌ன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹமீதை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜமீலை தேடி வருகின்றனர்

மீன் பிடி த‌டை கால‌ம்!கீழ‌க்க‌ரை அருகே ப‌ட‌குக‌ள் ப‌ழுது நீக்கும் ப‌ணி தீவிர‌ம்!



மீன்பிடி தடைக்காலத்தில் பழுது பார்ப்பதற்காக ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகுகள் சின்னஏர்வாடி கடற்கரை படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிழக்கு கடற் கரை பகுதிகளில் மீன் இனப் பெருக்கத்திற்காக ஏப்.15 முதல் மே 30 வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. அதனால் விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் பகுதிகளில் விசைப்படகுகளில் மீன்பிடிப்பது அதிகமாக உள்ளது. மற்ற பகுதிகளில் நாட்டுப்படகுகள், வல்லங்கள், கட்டுமரங்களில் மீன்பிடிப்பு நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றன.

தற்போது மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய ஏப்ரல் 15 முதலே பட கு களை பழுது பார்க்க தொடங்கிவிட்டனர். மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் படகுகளை கரை யில் ஏற்றி பழுதுபார்க்கும் படகு தளம் உள்ளது. மாவட்டத்தின் தெற்கு பகுதியில் பெரியபட்டினம், கீழக்கரை, வாலிநோக்கம் ஆகிய பகுதிகளில் பட குகளை பழுதுபார்க்கும் தளம் இல்லை.
இந்த கடற்கரை பகுதி யில் ஏர்வாடி அருகே சின்னஏர்வாடி படகு தளத்தை விட்டால் தூத்துக்குடி சென்றால்தான் படகுகளை சரி செய்ய முடியும்.

அதனால் கீழக்கரை, பெரியபட்டினம், ஏர்வாடி, வாலிநோக்கம், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகுகள் சின்ன ஏர்வாடி படகு தளத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுதுபார்க்கப்படுகின்றன.
இங்கு ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகளை கரைக்கு கொண்டு வந்து பழுதுபார்க்க இடம் உள்ளது. அதனால் இரண்டு மாவட்ட விசைப்படகுகளும் சின்னஏர்வாடி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு படகை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வர 20க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்கள் கரையில் இழுத்து வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

இதையடுத்து அந்த படகில் மர வேலைகள், இன்ஜின் பழுது, கடைசல் வேலைகள், மெக்கானிக் வேலைகள் செய்யப்பட்டு பெயிண்ட் அடிக்கப்படுகிறது. அதனால் சின்னஏர்வாடி கடற்கரை ஏப்.15 முதல் பிசியாகி உள்ளது. இங்கு எந்நேரமும் கார்பெண்டர்கள், பெயிண்டர்கள், மெக்கானிக்குகள் வேலை செய்த வண்ணம் உள்ளனர்.
ஒரு படகிற்கு குறைந்தது. ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை பழுது பார்க்கும் பணிகளுக்கு செலவாகிறது. இந்த 45 நாட்களில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி ஆட்கள், கார்பெண்டர்கள், மெக்கானிக்குகள், லேத் வேலை செய்பவர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. அதனால் கூலியும் கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது. மீன்பிடி தடைகாலம் இன்னும் ஒரு வாரமே உள்ளதால் படகுகளை சரிபார்க்கும், பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து மீனவர் குமார் கூறுகையில், ‘சின்னஏர்வாடி கடற்கரை பட குகளை ஏற்றி வேலை செய்ய வசதியாக உள்ள தால் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட படகுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. மீன்பிடித் தடை காலத்தில் ஒரே நேரத்தில் அனைத்து படகுகளும் பழுது பார்ப்பதால் கூலி தொழிலாளர்கள், கார்பெண்டர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. கூலி யும் கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது’ என்றார்.

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடுக‌ள் தொட‌ர்ந்தால் முற்றுகை போராட்ட‌ம்! எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் பேட்டி!















சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தார், உலமாக்கள் மற்றும் பொதுக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழக்கரையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக், தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மாவட்டச் செயலர் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில பொதுச் செயலர் அப்துல் ஹமீது வரவேற்றார், மாவட்ட செயலாளர் அப்துல்ஜமீல், செயற்குழு உறுப்பினர் அப்துல்வஹாப், மற்றும் முகமது இஸ்ஹாக், கனி, செய்யது ஹாலித், முஜிபுர் ரஹ் மான் உள்பட பலர் பேசினர், நகர் துணைத்தலைவர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்,
க‌ட‌ல்சார் தொழிலில் ஈடுப‌ட்டு வ‌ரும் அட்ட‌ப்பா என்ற‌ ந‌ல்ல‌ இப்ராஹிம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் எஸ்டிபிஐயில் இணைந்த‌ன‌ர்

மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:

கீழக்கரை நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது. முறைகேடுகள் தொடருமானால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் விரைவில் நடத்தப்படும்.

 திமுக ஆட்சியில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவித்ததை தற்போதைய அரசு பரிசீலனை செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். தென் தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டப்பணிகளை நிறுத்த தமிழக அரசு மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். இல்லாவிடில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிடும். இவ் வாறு கூறினார். ஏற்பாடுகளை அஸ்வத்துல் கரீம், அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
 

Wednesday, May 22, 2013

கீழ‌க்கரை மீன‌வ‌ர் கூட்டுற‌வு ச‌ங்க‌ புதிய‌ அலுவ‌ல‌க‌ திறப்பு விழா!


கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்தின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
நகராட்சி துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் விழாவுக்கு தலைமை வகித்து, அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார், சங்கத் தலைவர் லுக்மான் ஹக்கீம் வரவேற்றார். துணைத்தலைவர் அக்பர் அலி முன்னிலை வகித்தார், விழாவில் இயக்குநர்கள் முகம்மது அலி, முகம்மது அலியார், செய்யது அகமது கபீர் மற்றும் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்
 

கீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் ப‌யிற்சி மைய‌ம் அமைக்க‌ கோரிக்கை!



பைல்(ப‌ழைய‌ ப‌ட‌ம்) கீழ‌க்க‌ரை ப‌ழைய‌ ஜெட்டி பால‌த்திலிருந்து க‌ட‌லில் குதிக்கும் சிறுவ‌ர்க‌ள்

ராம‌நாத‌புர‌ மாவ‌ட்ட‌த்தில் கீழ‌க்க‌ரை க‌ல்வி ந‌க‌ர‌மாக‌ உருவாகி வ‌ருகிற‌து.ப‌ல்வேறு ப‌ள்ளி ம‌ற்றும் க‌ல்லூரிக‌ளில் ஆயிர‌க்க‌ண‌க்காண‌ மாண‌வ‌ ,மாண‌விக‌ள் ப‌டித்து வ‌ருகின்றன‌ர்.

மாணவ‌ர்க‌ள் உள்ளிட்ட‌  அனைவ‌ரும் ப‌ய‌ன் பெறும் வ‌கையில்
க‌ட‌லோர‌ ந‌க‌ர‌மான‌ கீழ‌க்க‌ரையில் அர‌சு சார்பில் நீச்ச‌ல் பயிற்சி மைய‌ம் அமைக்க‌ விளையாட்டு மேம்பாட்டு ஆணைய‌ம்  முன்வ‌ர‌ வேண்டும் என‌கோரிக்கை எழுந்துள்ள‌து.இத‌ன் மூல‌ம் ஏராள‌மான‌ நீச்ச‌ல் வீர‌ர்க‌ள் இப்ப‌குதியில் உருவாவார்க‌ள்.

இது குறித்து ச‌மூக‌ ந‌ல‌ ஆர்வ‌ல‌ர் செய்ய‌து இப்ராகிம் கூறுகையில்,

எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல். நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.
 
வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
நீச்ச‌ல் ப‌யிற்சி ஒவ்வொருவ‌ருக்கும் அவ‌சிய‌ம் தேவை முன்பெல்லாம் ஏராள‌மான‌ குள‌ங்க‌ள் ந‌க‌ரில் இருந்தது .இதில்  சிறுவ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு தெரிந்தவ‌ர்க‌ள் மூல‌ம் ப‌யிற்சி பெறுவார்க‌ள்.த‌ற்போது குளங்க‌ளே இல்லை என்ற‌ நிலை வ‌ந்து விட்ட‌து.ஆர்வ‌முள்ள‌ சிறுவ‌ர்க‌ள் க‌ட‌ற்க‌ரை சென்று நீச்ச‌ல் ப‌ழ‌குகின்ற‌ன‌ர்.முறையான‌ ப‌யிற்சியாள‌ர்க‌ள் இல்லாம‌ல் க‌ட‌லில் நீச்ச‌ல் ப‌ழ‌குவ‌து சிறுவ‌ர்க‌ளுக்கு பாதுகாப்பான‌து அல்ல‌.கீழ‌க்க‌ரையில் க‌ல்வி ப‌யிலும்  ஆயிர‌க்கண‌க்கான‌ மாண‌வ‌ர்க‌ளும்  நீச்ச்ல் ப‌யிசி பெறுவார்க‌ள்.

என‌வே ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ உள்ளிட்ட‌ ம‌க்க‌ள்  பிர‌திநிதிக‌ள்  அர‌சை வ‌லியுறுத்தி  கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அர‌சாங்க‌ம் நீச்ச‌ல் ப‌யிற்சி மைய‌ம் அமைக்க‌ நிதிக‌ளை பெற்று த‌ர‌ வேண்டும்.கீழ‌க்க‌ரை டைம்ஸ் இணைய‌த‌ள‌மும் உரிய‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌த்திற்கு எடுத்து செல்ல‌வேண்டும் என்றார்

 

Tuesday, May 21, 2013

கீழ‌க்க‌ரை க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைக்கும் திட்ட‌த்தை விரைவாக‌ செய‌ல்ப‌டுத்த‌ கோரிக்கை!




கீழக்கரை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.சிறுவ‌ர் சிறுமிய‌ர்க‌ள் உள்ளிட்ட‌ பொதுமக்க‌ளுக்கு பய‌ன்ப‌டும் வ‌கையில் அர‌சு சார்பில் பூங்கா கீழ‌க்க‌ரையில் இல்லை .கீழக்கரை கடற்கரையில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ப‌ல்லாண்டுக‌ளாக‌ இருந்து வ‌ருகிற‌து.


 புதிய ஜெட்டி பாலம் அமைக்கப்பட்ட பின் மீன் துறைக்கு சொந்தமான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மாலை நேரத்தில் கடலின் அழகை ரசிக்க ஏராள‌மான‌ மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாததால் பாதுகாப்ப‌ற்ற‌ நிலையில் (ஜெட்டி)கடல் பாலத்தில் அமர்ந்து வருகின்றனர்.


பால‌ம் அமைந்துள்ள கடற்க‌ரை ப‌குதியில் காலி இட‌ம் உள்ள‌து அந்த‌ இடத்தை கையகப்படுத்தி சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டும் என்ற‌ கோரிக்கை எழுந்த‌து. இதுகுறித்து ச‌மூக‌ ந‌ல‌ அமைப்புக‌ளும் கோரிக்கை விடுத்த‌ன‌ர் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா விரைவில் பூங்கா அமைப்பற்கான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டும் என‌ அறிவித்து சென்னையில் அமைச்ச‌ரை கோகுல் இந்திராவை ச‌ந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அர‌சு சார்பில் இத‌ற‌கான‌ ஆய்வு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு இத‌ற்கான‌ இட‌மும் தேர்வு செய்ய‌ப்ப‌டும் என்றும் அருகில் உள்ள‌ இட‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ள‌ ந‌க‌ராட்சி சார்பில் மீன் வ‌ள‌த்துறையிட‌ம் அனும‌தி கேட்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ என்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ஆனால் மாத‌ங்க‌ள் க‌டந்து விட்ட‌து இத‌ற்கான‌ ப‌ணிக‌ள் எதுவும் துவ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.என‌வே துரித‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிகை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ நெய்னார் கூறுகையில்,
ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை துரித‌ப்ப‌டுத்தி பூங்கா அமைப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ வேண்டும்  க‌ட‌ற்க‌ரையோர‌ம் காலி இட‌த்தில் பொதும‌க்க‌ள் அம‌ரும் வ‌கையில் சேர்க‌ள் அமைப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்ய‌ப் கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்ட‌து .த‌ற்காக‌லிக‌மாக‌ இதை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் செய்து த‌ர‌ வேண்டும்.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப‌ட்டு பூங்கா அமையுமானால் த‌ற்போதைய‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ரின்  சாத‌னை நிக‌ழ்வாக‌ ம‌க்க‌ள் ம‌ன‌தில் நிலைபெறும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்து க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது ,


பூங்கா அமைப்ப‌த‌ற்கு தேவையான‌ இட‌ம் கைய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ வேண்டும்.தொட‌ர்ந்து இத‌ற்கான‌ முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ ப‌ட்டு வ‌ருகிறது.த‌னியாரின் இட‌மும் அப்ப‌குதியில் உள்ள‌தால் பேச்சுவார்த்தை ந‌டைபெற்று வ‌ருகிறது.இட‌ம் கைய‌க‌ப‌டுத்தும் ப‌ணி நிறைவ‌டைந்த‌வும் க‌ட‌ற்க‌ரையோர‌ம் பூங்கா அமைப்ப‌த‌ற்கு தேவையான‌  ப‌ணிக‌ள் துவ‌ங்க‌ம் என்றார்.

 

எஸ்.டி.பி.ஐ சார்பில் கீழக்க‌ரையில் க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!மாநில‌ த‌லைவ‌ர் தெஹ்லான் பாக‌வி க‌ல‌ந்து கொண்டார்.




கீழ‌க்க‌ரை வ‌ருகை த‌ந்த‌ எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி த‌லைமையில் ப‌ல்வேறு தர‌ப்பின‌ரும் ப‌ங்கு பெற்ற‌ ச‌மூக‌ ந‌ல‌ன் குறித்த‌ க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்சசி கீழ‌க்க‌ரை ஹுசைனியா ம‌ஹாலில் ந‌டைபெற்ற‌து.இந்நிகழ்ச்சியில் திமுக‌ ந‌க‌ர் செய‌லாள‌ர் ப‌சீர்,எஸ்டிபிஐ நிர்வாகிக‌ள் மாநில‌ செய‌லாள‌ர் அப்துல் ஹ‌மீது,நிர்வாகிக‌ள் பெரிய‌ப‌டடிண‌ம் பிரோஸ்கான்,கீழ‌க்க‌ரை அப்பாஸ் ஆலிம்,ம‌ற்றும் முஜீப்,க‌ரீம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்.

மாநில‌ த‌லைவ‌ர் கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக‌வி  த‌லைமையில் நிர்வாகிக‌ள் உள்ளிட்டோர் கீழ‌க்க‌ரையில் ஹச்.எஸ்.அப்துல் காத‌ர் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு பிர‌முக‌ர்க‌ளையும் நேரில் ச‌ந்தித்த‌ன‌ர்.

மேலும் ஏராள‌மானோர் ப‌ல்வேறு கட்சிக‌ளிலிருந்து வில‌கி எஸ்டிபிஐயில் மாநில‌ த‌லைவ‌ர் முன்னிலையில் சேர்ந்த‌ன‌ர்.

\செய்தி : முஜீப்

Monday, May 20, 2013

கீழ‌க்க‌ரையில் ப‌ழைய‌ சேத‌ம‌டைந்த‌ மின்க‌ம்ப‌ங்க‌ள்!ஆப‌த்து ஏற்ப‌டும் முன் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் வேண்டுகோள்!


முற்றிலும் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பம்.

கீழ‌க்க‌ரையில் மின்சார‌த்துறைக்கு ரூ 5 கோடி ஒதுக்க‌ப்ப‌ட்டு ப‌ல்வேறு ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ உள்ள‌தாக‌ செய்திக‌ள் வெளியாயின‌.ஆனால் இன்னும் ப‌ல‌ இட‌ங்க‌ளில் ப‌ழ‌மையான‌ மின் க‌ம்ப‌ங்க‌ள் மாற்ற‌ப்ப‌டாம‌ல் சேத‌ம‌டைந்த‌ நிலையில் உள்ள‌ன‌.இத‌னால் பெரும் ஆப‌த்து ஏற்ப‌டும் முன் மின்சார‌த்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பொதும‌க்க‌ள் கோரிக்கை விடுத்துள்ள‌ன‌ர்!

இந்நிலையில் கீழக்கரை மேலத்தெரு மணியார்வெட்டையிலிருந்து பன்னாட்டு தெருவிற்கு செல்லும் வழியில் இரும்பினால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட இந்த இரும்பு கம்பம் தற்போது அடிப்பகுதியில் முழுவதும் அரிக்கப்பட்டு, எப்போதும் விழுந்து விடும் நிலையில் உள்ளது. அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆபத்தை அறிந்து கொள்ளாமல் இந்த மின் கம்பத்தின் அருகே குழந்தைகள் விளையாடுகின்றன. மக்கள் நடமாட் டம் அதிகம் உள்ள அந்த தெருவில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

சேதமடைந்த இந்த மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியை சேர்ந்த பொதுமக் கள் கீழக்கரை மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மின் வாரிய அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலத்தெருவை சேர்ந்த முகம்மது கூறுகையில், இந்த இரும்பு மின்கம்பம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டது. இந்த கம்பத்தின் அடிப்பகுதி முற்றிலும் அரிக்கப்பட்டுள்ளதால் கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில் இந்த கம்பத்தில் கை வைத்தால் ஷாக் அடிக்கிறது. இந்த கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இது போன்று கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளிலுள்ள‌ பழைய‌ மின்க‌ம்ப‌ங்க‌ளை மாற்ற‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ கோரிக்கை எழுந்துள்ள‌து.
 

Sunday, May 19, 2013

கீழ‌க்க‌ரை அருகே உள்ள‌ தீவுகளுக்கு‌ க‌ண்ணாடி இழை ப‌ட‌குக‌ள் இய‌க்க‌ கோரிக்கை!




 மன்னார் வளைகுடாவில்  சுமார் 560 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வான்தீவு, கோசுவாடி தீவு, விலாங்குசல்லி தீவு, காரைசல்லி தீவு, உப்பு தண்ணீர் தீவு, புளுனிசல்லிதீவு, நல்லதண்ணீர் தீவு, அணைப்பார் தீவு, வாலிமுனை தீவு, அப்பாதீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழைத் தீவு, முல்லைத் தீவு, முயல்தீவு, மனோலிதீவு, மனோலிபுட்டி தீவு, பூமரிச்சான் தீவு, குருசடை தீவு, சிங்கிலி தீவு என மொத்தம் 21 தீவுகள் உள்ளது. இந்த தீவுகளில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும்  முயல், நாய் போன்ற விலங்குகள் வசித்து வந்தன.

இதில் பூவ‌ர‌ச‌ன் ப‌ட்டி தீவு நீரில் முழ்கி விட்ட‌தாக‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

இது தவிர இந்த தீவுகளில் அரியவகை மூலிகைகளும், தாவர வகைகளும் முன்பு இருந்ததாக தெரியவருகிறது. மன்னார்வளைகுடா பகுதியில் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தங்களது ஓய்வு இடமாக இந்த தீவுகளை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 1986ம் ஆண்டில் 21 தீவுகளையும் தேசிய கடல்வளப் பூங்கா என அரசு அறிவித்தது. அரிய‌ க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ள் வாழும் ப‌குதியாக‌ அறிய‌ப்ப‌ட்ட்ட‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதி தீவுக‌ள் மன்னார்வளைகுடாவில் உயிர்கோள காப்பக அறக்கட்டளையினர்  தீவுகளின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த தீவுகளை சுற்றிலும் செயற்கையான பவளப்பாறைகளை உருவாக்கினர்.தீவுகளில் அதிக அளவில் செடிகளை நட்டு பராமரிக்க தொடங்கினர். தீவு பகுதியையும், அதனை ஒட்டியுள்ள பவளப்பாறைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் கோயா மிதவைகளை மிதக்கவிட்டுள்ள‌ன‌ர்.

 இந்நிலையில் கீழ‌க்க‌ரை ப‌குதியில் அர‌சு சார்பில் சுற்றுலா பயணிக‌ளை ஈர்க்கும் வ‌கையில் தீவுக‌ளைக‌ளையும்,ப‌வ‌ள‌பாறைக‌ளையும் பொதும‌க்க‌ள் க‌ண்டு வ‌ரக‌ண்ணாடி இழை ப‌‌ட‌குகளை அர‌சு இய‌க்க கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

இது குறித்து காங்கிர‌ஸ் பிர‌முக‌ர் ஹ‌ச‌னுதீன் கூறிய‌தாவ‌து,

கீழக்கரை க‌ட‌ல் பகுதியில் உள்ள அப்பா தீவு 28.63-ஹெக்டேர் நிலப்பரப்பிலும், நல்ல தண்ணீர் தீவு 110 ஹெக்டேர் நிலப் பரப்பிலும் அமைந்துள்ள‌து. மேலும் சில‌ தீவுக‌ள் உள்ள‌ன‌.கண்ணாடி இழையுடன் கூடிய படகுகளை பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தினால் கடலுக்கு அடியில் வாழும் அபூர்வ உயிரினங்களை கண்டு களிக்க முடியும் கரையோரங்களில் உள்ள பவளப்பாறைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமையும். மேலும் கடல் சார்ந்த சுற்றுலா தளமாக்க அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளது.இந்த தீவுகளை கண்டு களிக்கும் வகையில் படகு போக்குவரத்து நடத்தப்பட்டால் , சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். கட‌ல் வ‌ள‌த்தை,மீன் பிடி தொழிலையும் பாதிக்காத‌ வ‌கையில் சில‌ க‌ட்டுப்பாடுக‌ளை விதித்து சுற்றுலா பய‌ணிக‌ளை அழைத்து செல்லும் வ‌கையில் க‌ண்ணாடி இழை ப‌ட‌குக‌ளை இய‌க்க‌லாம்.இத‌னமூல‌ம் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ தீவுக‌ள் செல்வ‌தும் குறைந்து விடும்.

Saturday, May 18, 2013

குடிநீர் விநியோக‌த்திற்க்காக‌ மாலாக்குண்டுவில் 5 ஆண்டுக‌ளுக்கு பிற‌கு கிண‌றுக‌ள் தூர் வாரும் ப‌ணி!



கீழக்கரையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காணும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணறு ஐந்து ஆண்டுகளுக்கு பின் தூர்வாறும் பணி நடைபெறுகிறது.கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கீழக்கரையில் காவிரி நீர் முழுமையான அளவு சப்ளை செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்க‌ பெறும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். போதியளவு குடிநீர் கிடைக்காததால் மாட்டுவ‌ண்டி ம‌ற்றும் லாரி நீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது.இந்நிலையில் ந‌க‌ராட்சி சார்பில் முதற்கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாகனங்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.மக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் வகையில் மாலாக்குண்டுவில் உள்ள குடிநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
 நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறியதாவது;
மாலாக்குண்டுவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மூன்று குடிநீர் கிணறுகள் உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுளுக்கு மேலாக‌  பராமரிப்பு இல்லாமல் இருந்த வந்தது.மக்களுக்கு கூடுதலாக குடி நீர் வழங்கும் வகையில் மூன்று கிணறுகளும் தற்போது தூர் வாரப்படுகிறது.கிணறுநீரை குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டு அவர்களது ஒப்புதல் கிடைத்ததும், தலைமை நீரேற்று நிலையத்திற்கு குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் தினமும் கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது சுழற்சிமுறையில் அனைத்து வார்டு
களுக்கும் லாரி மற்றும் டிராக்டர்களில் இலவசமாக நாள்தோறும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.லாரி செல்ல முடியாத பகுதிகளுக்கு டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்கப்படுவதால் குடி த‌ட்டுப்பாடு ஓர‌ள‌வு குறைந்துள்ள‌து என்றார்.

 

Friday, May 17, 2013

கீழ‌க்க‌ரை 18வ‌து வார்டில் கிண‌ற்றுநீரில் க‌ழிவுநீர் க‌ல‌ந்து அசுத்த‌ம்!ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ கோரிக்கை!






கீழ‌க்க‌ரை தெற்குதெரு ப‌குதியில் சில‌ வீடுக‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ கிண‌றுக‌ளில் கிடைக்கும் நீரில் சாக்க‌டை க‌லந்து வ‌ருவ‌தால் கிண‌ற்று நீரை ப‌ய‌ன்ப‌டுத்‌த‌ முடியாத‌ அபாய‌ சூழ்நிலை ஏற்ப‌ட்டுள்ள‌து. உட‌ன‌டியாக‌ இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் கோரிக்கை விடுத்துள்ளன‌ர்.

18 வது வார்டு பகுதியில் 18/ 148 வது நம்பர் வீட்டிலும் ,அது போல 18/225 எண் கொண்ட‌ வீட்டிலும் இன்னும் சில‌ வீடுக‌ளிலும் இது போன்ற‌ சூழ்நிலை நில‌வுவ‌தாக‌ கூறுகின்ற‌ன‌ர். இது குறித்து அவ‌ர்க‌ள் கூறிய‌தாவ‌து இப்பகுதியில் கிணறுகளில், தண்ணீர் சாக்கடை நீராக மாறி வருகிறது. இதனால் நோய் பரவும் நிலை உள்ளது. தினந்தோறும் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது உள்ளது. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. வீடுக‌ளில் பயன்படுத்தி வந்த கிணற்று நீர், சாக்கடை நீராக மாறி  எத‌ற்கும் பயன்படுவதில்லை.இவ்வ‌ழியாக‌ செல்லும் க‌ழிவுநீர் கால்வாயில் குப்பைக‌ள் நிறைந்து நீண்ட‌ கால‌மாக‌ க‌ழிவு நீர் தேங்கி நிற்ப‌தால் இப்ப‌குதியில் கிண‌றுக‌ளில் சாக்க‌டை ‌கல‌ந்திருக்க‌லாம்.இப்பிர‌ச்சனையிலிருந்து ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் எங்க‌ளை காப்பாற்ற‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்கள் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் த‌ங்க‌ம் ராதாகிருஸ்ண‌ன்  கூறிய‌தாவ‌து,

இத‌ற்கு ‌ பாதாள‌ சாக்க‌டை திட்ட‌மே நிர‌ந்த‌ர‌ தீர்வாகும்.கீழ‌க்க‌ரையில் எதிர்கால‌த்தில் பெரும்பாலான‌ கிண‌றுக‌ளில் இது போன்று சாக்க‌டை க‌ல‌க்கும் சூழ்நிலை ஏற்ப‌ட்டால் நீர் ஆதார‌மே பாதிக்க‌ப்ப‌டும் அபாய‌ம் உள்ள‌து.

பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக அமைத்து பராமரிக்கும் பட்சத்தில், பொதுமக்களின் ஆரோக்கத்துக்கு நிரந்தர பயனளிக்கும். கழிவு நீர், சாக்கடை நீர் திறந்த வெளியில் தேக்கம் தவிர்க்கப்படும். துர்நாற்றம் வீசுவது தவிர்க்கப்படும். வீட்டிற்குள் அமைக்கும் செப்டிக் டேங்க் அவசியமில்லை. கொசுவினால் பரவும் யானைக்கால் நோய் முற்றிலும் தடுக்கப்படும். நோய் பரப்பும் சில பூச்சுகள், கிருமிகள் உற்பத்தியை தடுத்து நோய் பரவுதை தடுக்கலாம். கழிவு நீர் தேக்கத்தால் கிணற்று நீர், ஆழ்த்துளை கிணற்று நீர் மாசுப்படுவது தவிர்க்கப்படுகிறது. பன்றி போன்ற விலங்கினங்களின் தொல்லை குறையும்.

மழைக்காலத்தில் சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து சாலைகளில் வழிந்து ஓடாது. பாதாள சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தர நிர்ணயப்படி சுத்தம் செய்வதால், அந்நீரை விவசாயத்திற்கு மீண்டும் பயன்படுத்தலாம்.  விவசாயத்திற்கு சுத்திரிக்கப்பட்ட சாக்கடை நீர் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதனால், சுற்றுப்புற‌ சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும்.த‌ற்போது கீழ‌க்க‌ரையின் க‌ழிவு நீர் சுத்திக்க‌ப‌டாம‌ல் நேர‌டியாக‌ க‌ட‌லில் க‌ல‌க்கிற‌து இத‌னால் க‌ட‌ல் நீர் மாச‌டைகிற‌து.இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டால் க‌ட‌ல் நீர் மாடைவ‌து த‌டுக்க‌ப்ப‌டும்.கீழ‌க்க‌ரை சுகாதார‌ம் மேம்ப‌டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி தலைவ‌ர் ராவித்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

க‌ழிவு கால்வாய்க‌ளில் குப்பைக‌ளை போடாதீகள் ப‌ல‌முறை வேண்டுகோள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.குப்பைக‌ளை அதில் வீசினால் நாம்தான் பாதிக்க‌ப்ப‌வோம் என்ப‌தை வீசுப‌வ‌ர்க‌ள் ஏன் நினைப்ப‌தில்லை.குப்பைக‌ள் அக்ற்ற‌ப்ப‌ட்டு க‌ழிவு நீர் தேங்காம‌ல் இருப்ப‌த‌ற்கும் ந‌ட‌வ‌டிக்க‌ எடுக்க‌ப்ப‌டும் மேலும் குறிப்பிட்ட‌ விடுக‌ளில் உள்ள‌ கிண‌ற்று நீரில் சாக்க‌டை நீர் கல‌ந்து வ‌ருவ‌து எத‌னால் என்று அறிந்து உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.இது போன்ற‌ குறைக‌ள் இருக்கும் ப‌ட்ச‌த்தில் ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் என்ற‌ முறையில்  என்னிட‌ம் அலுவ‌ல‌க‌த்தில் தெரிவிக்கால‌ம் என்றார்





 

கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதி குப்பைக‌ளை அக‌ற்ற‌ ந‌க‌ராட்சிக்கு‌ வேண்டுகோள்!



கீழ‌க்க‌ரை சேரான் தெரு ப‌குதியில் குப்பைக‌ளை நிறைந்து காண‌ப்ப‌டுவ‌தால் சுகாதார‌ கேடு ஏற்ப‌டும் நிலை உள்ள‌தாக‌வும் உட‌ன‌டியாக‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ அப்ப‌குதி ம‌க்க‌ள் கோர்க்கை விடுத்துள்ள‌ன‌ர்.

இது குறித்து  ஆசிக் ம‌ரைக்க‌ கூறிய‌தாவ‌து,

இப்ப‌குதியில் ம‌க்க‌ள் தாங்க‌ளே ப‌ண‌ம் செல‌வ‌ழித்து சுத்த‌ம் செய்து வைத்திருந்த‌ன‌ர்.ஆனால் த‌ற்போது ந‌கராட்சி ப‌ணியாள‌ர்க‌ளே ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் சேரும் குப்பைக‌ளை இப்ப‌குதியில் கொட்டி விட்டு செல்கின்ற‌ன‌ர்.இத‌னால் இப்ப‌குதியில் மீண்டும் குப்பைக‌ள் குவிந்து அசுத்த‌மாக‌ காண‌ப்ப‌டுகிற‌து.என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் மேலும் இது குப்பைக‌ளை கொட்டி விட்டு அக‌ற்றாம‌ல் செல்லும் ப‌ணியாள‌ர்க‌ளை கண்காணித்து உரிய‌ தீர்வு காண‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

Thursday, May 16, 2013

(காலமானார்கள்) வபாத் அறிவிப்பு !


கீழக்கரை ப‌ழைய‌ குத்பா ப‌ள்ளி ஜமாத்தை சேர்ந்த‌ சேகு முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌க‌னும்,சேகு நெய்னா அவ‌ர்க‌ளின் ம‌ரும‌க‌னும், பி.எஸ்.எம். பதுரு ஜ‌மான் அவ‌ர்க‌ளின் ச‌கோத‌ருமான‌ பி.எஸ்.எம் உபைதுல்லா அவ‌ர்க‌ள் வபாத்தானார்க‌ள்(கால‌மானார்க‌ள்). (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

த‌க‌வ‌ல் : ப‌ர‌க்க‌த் அலி

தொடர்பு  :- செய்யது அபு சாலிஹ் - 9944541789
 

தெற்கு தெரு ப‌குதியில் காண்ட்ராக்ட‌ரின் த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணியால் மீண்டும் சுகாதார‌ கேடு!2 நாட்க‌ளில் க‌ழிவுநீர் தொட்டிக‌ள் உடைந்த‌தாக‌ க‌வுன்சில‌ர் புகார்! ந‌ட‌வ‌டிக்கை எடுக்க கோரிக்கை!




கீழக்கரை தெற்குத்தெரு பகுதியில் க‌ழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடி பள்ளி மாணவர்களுக்கும்,மசூதி மற்றும் பெண்கள் மசூதி ஆகியவற்றிற்கு செல்லும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.இது குறித்து ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ பொதும‌க்க‌ள் ந‌க‌ராட்சிக்கு கோரிக்கை விடுத்து வ‌ந்த‌ன‌ர்.

இந்நிலையில் அப்ப‌குதி க‌வுன்சில‌ர் ஆனா மூனாவின் கோரிக்கையின் பேரில் கீழக்கரை நகராட்சி நிர்வாக‌ம்  அப்பகுதியில் அடைப்புக‌ளை ச‌ரி செய்து புதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ 4 இன்ச் அள‌வுள்ள‌ கழிவுநீர் குழாய்களை அக‌ற்றி விட்டு 8 இன்ச் பெரிய கழிவுநீர் குழாய்கள் ப‌திக்க‌வும்,க‌ழிவு நீர் தொட்டிகளை சீர்‌ செய்ய‌ கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி சார்பில் த‌னியார் காண்ட்ராக்ட‌ர் மூல‌ம் ப‌ணி ந‌டைபெற்ற‌து முடிந்த‌து.ஆனால் த‌ற்போது புதியதாக‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ழிவு நீர் தொட்டிக‌ள் சேத‌ம‌டைந்ததால் முன்பு போல் க‌ழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிற‌து.

இது குறித்து தெற்குதெரு ஜ‌மாத் நிர்வாக‌ அலுவ‌ல‌ர் பெரிய‌ காக்கா என்ற‌ காத‌ர் கூறிய‌தாவ‌து,
த‌ற்போது மீண்டும் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் உடைந்தும்,க‌ழிவு நீர் குழாயிலிருந்து க‌ழிவு நீர் வெளியேறி தெற்கு தெரு ப‌ள்ளிவாச‌ல் அருகில் ஆறாக‌ ஓடுகிற‌து.இத‌னால் இப்ப‌குதியில் தொழுகைக்கு வ‌ருப‌வ‌ர்க‌ள்,பெரிய‌வ‌ர்க‌ள்,குழ‌ந்தைக‌ள் ந‌ட‌ந்து செல்வ‌த‌ற்கு மிக‌வும் சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.மேலும் நோய் ப‌ர‌வும் வாய்ப்பும் ஏற்ப‌டும் என‌வே உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது க‌வுன்சில‌ர் ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முகைதீன் காத‌ர் சாகிப் கூறிய‌தாவ‌து,
ரூ 1ல‌ட்ச‌த்து 20 ஆயிர‌ம் ம‌திப்பீட்டில் இப்ப‌ணிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌ ஆனால் த‌ர‌மற்ற‌ ப‌ணியால் க‌ழிவு நீர் தொட்டிக‌ள் இர‌ண்டே நாட்க‌ளில் உடைந்தது.உட‌னே நான் புகார் தெரிவித்தேன் சில‌வ‌ற்றை காண்ட்ராக்ட‌ர் ச‌ரி செய்தார் ஆனாலும் ப‌ணிக‌ள் த‌ர‌மில்லாத‌தால் த‌ற்போது க‌ழிவு நீர் சாலையில் ஆறாக‌ ஓடுகிற‌து.இப்ப‌ணிக‌ளை மேற்கொண்ட‌ ஒப்ப‌ந்தார‌ரை இப்ப‌ணிக‌ளை சீர் செய்து த‌ர‌ ந‌க‌ராட்சி உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியா கூறிய‌தாவ‌து,
இது குறித்து யாரும் த‌க‌வ‌ல் த‌ர‌வில்லை த‌ற்போது உட‌ன‌டியாக‌ ந‌ட‌வ‌டிக்கை மேற்கொள்ள‌ப்ப‌டும்.த‌ர‌ம‌ற்ற‌ ப‌ணிக‌ள் மேற்கொண்ட‌ காண்ட்ராக்ட‌ருக்கு ப‌ணிக‌ள் த‌ர‌மாக‌ இருந்தால் ம‌ட்டுமே அத‌ற்கான‌ முழு தொகையும் வழ‌ங்க‌ப்ப‌டும்.இல்லையெனில் இப்ப‌ணி மெற்கொண்ட‌த‌ற்காக‌ அவ‌ருக்கான‌ தொகை அளிப்ப‌து நிறுத்த‌ப்ப‌டும் என்றார்.



 

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌ர‌ம‌ற்ற‌ ஜென‌ரெட்ட‌ர் வாங்கியுள்ள‌தாக‌ புகார் !




கீழக்கரை நகராட்சியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் 21, 5வது வார்டுகளில் உள்ளன.

இவ்விரண்டிலும் 15 கி.வாட் மின்சாரத்தில் இயங்கும் மின் மோட்டார்கள் உள்ளன மின் தடை ஏற்படும் நேரங்களில் கழிவுநீரை வெளியேற்ற இயலாமல் போகிறது.

இதனால் கழிவுநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியது. மின்தடை நேரத்தில் கழிவுநீர் வெளியேற்றும் பணி தொய்வின்றி தொடர பம்பிங் ஸ்டேசனுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், சாகுல்ஹமீது ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2 மாதங்களுக்கு முன் ஒரு ஜெனரேட்டர் மட்டும் வாங்கப்பட்டு, 21 வது வார்டில் வைத்து இயக்கப்பட்டது, இந்த ஜெனரேட்டர் தரமற்றது என நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார். தரமானதுதான் என நகராட்சித் தலைவர் என கூறினார்.

இதற்கிடையே, புதிய ஜெனரேட்டரின் சேஞ் ஓவர் ஸ்விட்ச் பழுதாகியதால் கடந்த ஒரு வாரமாக கழிவு நீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி நிற்கிறது. டெண்டர் கொட்டேஷனில் கிர்லோஸ்கர் நிறுவன ஜெனரேட்டர் ரூ.3 லட்சம் என விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரேட்டர் விநியோக டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர் வேறு தரமான நிறுவன பெயர் ஸ்டிக்கரை ஒட்டி சீன தயாரிப்பு ஜெனரேட்டரை சப்ளை செய்துள்ளார். ஜெனரேட்டரின் வாங்க கொட்டேஷன் வாங்கியதில் ரூ.1.85 லட்சம்தான் என தெரிய வந்துள்ள‌தாக‌வும், ஜெனரேட்டரை ஆய்வு செய்த பிறகு அதற்குரிய பணம் வழங்கவும், மேலும் 2 ஜெனரேட்டரை தரமான நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


கவுன்சிலர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய ஜெனரேட்டரில் முறைகேடு நடந்துள்ளது. தரமான நிறுவன ஜெனரேட்டருக்குரிய தொகையைப் பெற்றுக்கொண்டு சீன தயாரிப்பை வைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். 2 மாதத்தில் பழுதாகிய ஜெனரேட்டர் விவகாரத்தில் அதிகாரிகள் மழுப்பலாக பதில் கூறுகின்றனர் .இது குறித்து க‌மிஷ‌ன‌ரருக்கு புகார் செய்ய‌ போன் செய்தால் போனை எடுப்ப‌தில்லை பொறுப்பான‌ அதிகாரி இது போன்று இருந்தால் எப்ப‌டி குறைக‌ளை தீர்க்க‌ முடியும் ? என்றார்.

இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

எவ்வித‌ முறைகேடு ந‌டைபெற‌வில்லை.சைனா தயாரிப்பு என்பெதெல்லாம் பொய் இந்திய‌ த‌யாரிப்பு ஜென‌ரெட்ட‌ர்தான்.ஜென‌ரெட்ட‌ர் ப‌ழுதான‌து குறித்து நிறுவ‌ன‌த்திட‌ம் புகார் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அந்த‌ நிறுவ‌ன‌த்தின‌ர் ச‌ரி செய்வார்க‌ள்.மேலும் ஒரு வ‌ருட‌ம் வார‌ண்டி உள்ள‌து.உண்மை நிலை இப்ப‌டி இருக்கும் போது க‌வுன்சில‌ர் ஜெய‌பிர‌காஷ் ஏன் இது போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளை கூறுகிறார் என்று தெரிய‌வில்லை என்றார்
 

Wednesday, May 15, 2013

கீழ‌க்க‌ரை தாசிம் பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரியில் புதிய‌ மாண‌விய‌ர் சேர்க்கை !


கீழ‌க்க‌ரையில் அதிக‌ரித்த‌ நாய்க‌ளை க‌ட்டுப‌டுத்த‌ 50க்கும் மேற்ப‌ட்ட‌ நாய்க‌ளுக்கு க‌ருத்த‌டை சிகிச்சை!



கீழ‌க்க‌ரை நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 50 ஆயிர‌த்திற்கும் மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பெரும்பாலான தெரு, சாலைகளில் ஏராள‌மான‌ நாய்கள் சுற்றித் திரிந்தன‌.

இவற்றில் சில நாய்கள், சாலையில் நடந்து செல்பவர்க‌ளை கடிப்ப‌தாக‌வும் ,சாலையில் சுற்றித்
திரியும் நாய்களால், இருசக்கர வாகனங்களில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவ‌தாகவும்,ப‌ள்ளி குழ‌ந்தைக‌ள் ரோட்டில் ந‌ட‌க்க‌ அச்ச‌ம‌டைவதாக‌வு என‌வே கீழ‌க்க‌ரை    நகராட்சியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த‌ன‌ர்.

 
இதையடுத்து, நகராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் கத‌ரியாவின் ந‌ட‌வ‌டிக்கையின் பேரில் கீழ‌க்க‌ரை ந‌க‌ரில் அதிக‌ரித்து வ‌ரும் நாய்களை க‌ட்டுப்ப‌டுத்த‌ அவைக‌ளுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நகரில் சுற்றி திரிந்த 50க்கும்  மேற்ப‌ட்ட நாய்களை ந‌க‌ராட்சி  ப‌ணியாள‌ர்க‌ள் உத‌வியுட‌ன்‌ பிடித்தனர்.பின்ன‌ர் இந்த‌ நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

நாய்களுக்கு மயக்க ஊசி போட்டு கருத்தடை சிகிச்சையை கால்ந‌டை ம‌ருத்துவ‌ர் செய்தார். மேலும்  நாய்களுக்கு வெறி தன்மை குறையவும் ஊசி போடப்பட்டது.

 

Tuesday, May 14, 2013

கீழ‌க்க‌ரை அருகே லாரி விப‌த்து!குளிர் பான‌ங்க‌ள் சாலையில் சித‌றிய‌தால் போக்குவ‌ர‌த்து பாதிப்பு!



கீழ‌க்க‌ரை காஞ்சிர‌ங்குடி அருகில் குளிர் பான‌ம் ஏற்றி வந்த‌ லாரியின் பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலைதடுமாறி த‌லை குப்புற‌ க‌விழ்ந்து குளிர் பான‌ங்க‌ள் ந‌டுரோட்டில் சித‌றிய‌தால் சிறிது நேர‌ம் போக்கு வ‌ர‌த்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌து.

தேவிப‌ட்டிண‌த்திலிருந்து கீழ‌க்க‌ரைக்கு குளிர் பான‌ லாரி ஒன்றை தேவிப்ப‌ட்டிண‌த்தை சேர்ந்த‌ டிரைவ‌ர் வெங்க‌டேஷ்)24) ஓட்டி வ‌ந்தார்.உட‌ன் சேல்ஸ் மேன் முத்துகுமார் என்ப‌வ‌ரும் வ‌ந்துள்ளார்.ககாஞ்சிர‌ங்குடி ப‌ஸ் ஸ்டாப் அருகில் வ‌ரும்  போது பின் ப‌க்க‌ ட‌ய‌ர் வெடித்து நிலை த‌டுமாறிய‌ லாரி த‌லைகுப்புற‌ க‌விழ்ந்த‌தாக‌ அப்ப‌குதியில் உள்ள‌வ‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.இருவ‌ரும் காய‌மின்றி த‌ப்பின‌ர்.



 

கீழ‌க்க‌ரை ப‌குதி க‌ட‌லில் ப‌ழமை வாய்ந்த‌‌ முறையான‌ கூடு வைத்து மீன் பிடித்த‌லில் ஈடுபடும் மீன‌வ‌ர்க‌ள்!



த‌மிழ‌க‌த்தில் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம்  நீணட‌ கட‌லோர‌ ப‌குதியை கொண்ட‌தாகும்.மன்னார் வ‌ளைகுடா க‌ட‌ல் ப‌குதி என்ற‌ழைக்க‌ப்ப‌டும் இப்ப‌குதிய்ல் ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் மீன் பிடி தொழில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.ராமேஸ்வ‌ர‌ம்,ம‌ண்ட‌ம்,கீழ‌க்க‌ரை ,ஏர்வாடி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ஊர்க‌ளில் க‌ட‌ல் சார் வ‌ணிக‌ம் அதிக‌ள‌வில் ந‌டைபெற்று வ‌ருகிற‌து.

த‌ற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 45 நாள் தடை உள்ள‌து.தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்தால் மீ்ன் இனம் அடியோடு பாதிக்கப்படும் என கண்டறியப்ப‌ட்டுள்ள‌தால் ப‌ல‌ ஆண்டுகளாக ஏப்ரல் 15ம் தேதி முதல்45 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் த‌ற்போது ம‌ண்ட‌ப‌ம்,கீழ‌க்க‌ரை உளளிட்ட‌ ஊர்க‌ளில் பழ‌ங்கால‌த்தில் பிரதான‌ முறையாக‌ இருந்த‌ ப‌ழ‌மை வாய்ந்த‌ கூடு வைத்து மீன் பிடிக்கும் முறையை ப‌ய‌ன்ப‌டுத்தி மீன‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர்  மீன் பிடிப்பில் ஈடுப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌ர்.த‌ற்போதைய‌ கால‌த்தில் இவ்வ‌கை மீன் பிடி முறை அரிதாகி விட்ட‌து

நாட்டு உடை ம‌ர‌த்தின் குச்சி மூல‌ம் இவ்வ‌கை மீன் பிடி கூடுக‌ள் செய்ய‌ப்ப‌டுகிற‌து.நாட்டு உடை ம‌ர‌க்குச்சிக‌ள் கிடைக்காத‌ ப‌ட்ச‌த்தில் ப‌னைவேர் ,ஈச்ச‌ம‌ர‌ம்,க‌ருவோடைவேர் உள்ள்ட்ட‌வைக‌ளையும் ப‌ய‌ன்ப‌டுத்தி கூடுக‌ளை த‌யாரிக்கின்றன‌ர் (இப்ப‌குதிக‌ளில் நாட்டு உடை ம‌ர‌ங்க‌ள் வெகுவாக‌ குறைந்து விட்ட‌ன‌.வேலி க‌ருவேலி ம‌ர‌ங்க‌ள் அதிக‌ரித்து விட்ட‌ன‌).

வ‌ல்ல‌த்திலோ,வ‌த்தையிலோ,க‌ட்டும‌ர‌த்திலோ க‌ட‌லுக்கு இவ்வ‌கை கூடுக‌ளை எடுத்து செல்லும் மீன‌வ‌ர்க‌ள் த‌னியாக‌வோ அல்ல‌து சில‌ருட‌ன் சேர்ந்தோ இத்தொழிலில் ஈடுப‌டுகிறார்க‌ள்.இத்தொழிலில் ஈடுப‌ட‌ க‌ட‌லில் 5 பாக‌த்திற்கு மேல்(ஒரு பாக‌ம் ‍ஆறு அடி என்று குறிப்பிடுகிறார்க‌ள்) க‌ட‌லுக்கு அடியில் செல்கிறார்க‌ள்.  காலை அல்ல‌து மாலை நேர‌ங்க‌ளில் க‌ட‌லுக்குள் முப்ப‌து அடி ஆழ‌த்திற்குள் மீன்க‌ள் அதிக‌ம் இருக்கும் பகுதிக்குள் முக‌ க‌வ‌ச‌த்துட‌ன் முழ்கி செல்லும் மீன‌வ‌ர்க‌ள் கூட்டை அடியில் வைத்து விட்டு அதில் மீனுக்கு இரையையும் போட்டு விட்டு வ‌ந்து விடுவ‌ர்.

மீன்க‌ளுக்கு இரையாக‌ இறால் ம‌ண்டையை வைக்கிறார்க‌ள் சின்ன‌ கூட்டுக்கு ஒரு கிலோ இறால் மண்டையும் பெரிய‌ கூட்டிற்கு ஒன்றை கிலோ இறால் ம‌ண்டையை இரையாக‌ வைக்கிறார்க‌ள்.பின்ன‌ர் ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் க‌ட‌லுக்குள் சென்று கூடுக‌ளில் பிடி ப‌டும் மீன்க‌ளை எடுத்து வருகின்ற‌ன‌ர்.இவ்வ‌கையாக‌ பிடிப‌டும் மீன்க‌ள் ருசியும் அதிக‌ம் இருக்கும் என‌ தெரிவிக்கிறார்க‌ள்.

த‌க‌வ‌ல் உத‌வி எஸ்.ர‌ங்க‌சாமி

இது குறித்து க‌ட‌ல் சார் தொழிலில் ஈடுப‌ட்டு வ‌ரும் கீழ‌க்க‌ரை நெய்னா முக‌ம்ம‌து கூறுகையில்,

இவ்வ‌கையான‌ மீன் பிடித்தொழிலில் செய்ய‌ அதிக‌ முத‌லீடு தேவையில்லை பிடிப‌டும் மீன்க‌ளின் எடை 4 கிலோ முத‌ல் 8 கிலோ வ‌ரை இருக்கும்,கட‌ல் வ‌ள‌த்தை பாதிக்காது,ப‌ல்வேறு வ‌கையான‌ வ‌லைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்தி மீன்க‌ள் குஞ்சு ப‌ருவ‌த்திலேயே பிடிக்க‌ப்படுவ‌து த‌டுக்க‌ப்ப‌டுகிற‌து.மேலும் க‌ட‌லில் முழ்கி ச‌ங்கு எடுக்க‌ தெரிந்த‌வ‌ர்க‌ள்,கூடு பின்ன‌ தெரிந்த‌வ‌ர்க‌ள் ,க‌ட‌லில் எந்த‌ ப‌குதியில் மீன்க‌ள் கிடைக்கும் என்ப‌தை ஓர‌ள‌வுக்கு தெரிந்த‌வ‌ர்க‌ள் இத்தொழில் வெற்றிக‌ரமாக‌ செய‌ல்ப‌ட‌முடியும்.அர‌சாங்க‌ம் இவ்வ‌கையான‌ தொழில்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்த‌வேண்டும் என்றார்.
 

Monday, May 13, 2013

கீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை திற‌க்க‌ ஏற்பாடு!


 துபாயில் வ‌ணிக‌ மேலாண்மை குறித்த‌‌ க‌ருத்த‌ர‌ங்கு 09.05.2013 வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் ப‌ரோடா வ‌ங்கி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ளின் அலுவ‌ல‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌மிழ‌க‌த்திலிருந்து த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கியின் துணைப் பொது மேலாள‌ர் எம். குண‌சேக‌ர‌ன் ம‌ற்றும் பிராந்திய‌ மேலாள‌ர் செந்தில் ஆன‌ந்த‌ன் ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து ஈடிஏ அஸ்கான் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர்கான் அவ‌ர்க‌ளையும் ச‌ந்தித்து கீழ‌க்க‌ரையில் விரைவில் த‌மிழ்நாடு வ‌ங்கிக் கிளை திற‌க்க‌ப்ப‌ட‌ இருப்ப‌து குறித்தும் அவ்விழாவில் ப‌ங்கேற்க‌ வேண்டும் என‌வும் வ‌லியுறுத்தின‌ர். நிக‌ழ்வின் போது வ‌ங்கியின் துபாய் பிர‌திநிதி விருதுந‌க‌ர் ச‌ந்திர‌சேக‌ரும் உட‌ன் இருந்தார்.

கீழ‌க்க‌ரையில் சிட்டி யூனிய‌ன் வ‌ங்கி இட‌ மாற்ற‌ம்! கிழ‌க்குத்தெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் திற‌ப்பு விழா!

கீழ‌க்க‌ரையில்  கொந்த‌ன் க‌ருணை அப்பா த‌ர்ஹா அருகில் இய‌ங்கி வ‌ந்த‌  இய‌ங்கி வ‌ந்த‌ சிட்டியூனிய‌ன் வ‌ங்கி த‌ற்போது இட‌மாற்ற‌ம் செய்ய‌ப்ப‌ட்டு கிழ‌க்குதெருவில் புதிய‌ க‌ட்டிட‌த்தில் ஏடிஎம் வ‌ச‌தியும் திற‌ப்பு விழா  துணை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ந‌டைபெற்ற‌து. முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளர் யூசுப் சாகிப் திறந்து வைத்தார்.

கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாதிக் ஏ.டி.எம்., மையத்தையும், எஸ்.எம்.என்., பாக்கர், பாதுகாப்பு பெட்டக அறையையும் திறந்தார் கீழக்கரை கிளை மேலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.மண்டல வளர்ச்சி அலுவலர் ராஜா, ராமநாதபுரம் கிளை மேலாளர் பிரபாகரன், நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத், செயலாளர் சுப்பிரமணியன் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லுக்மான் ஹக்கீம்பங்கேற்றனர்.துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்., மூலமாக பணம் செலுத்தும் வசதியை, ஏற்படுத்த உள்ளோம், என்றார்

கீழ‌க்க‌ரை முஸ்லீம் ப‌ஜார் ப‌குதியில் குப்பைக‌ளை அக‌ற்ற‌ கோரிக்கை!




கீழக்கரையில் முஸ்லீம் பஜார் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்ற உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குப்பைகளை அகற்ற நகராட்சியில் தற்போது 24 துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
முஸ்லீம் பஜார் பகுதியை சேர்ந்த அகமது அப்துல் காதர் கூறுகையில்,
கடந்த ஒரு வாரமாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகிறோம். வழக்கமாக எங்கள் பகுதியில் 3, 4 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகளை அகற்றுகின்றனர். இது குறித்து நகராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குப்பைகளை தினமும் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


இது குறித்து ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் க‌த‌ரியாவிட‌ம் கேட்ட‌ போது,

ஒரு வார‌மாக‌ அக‌ற்றாம‌ல் இருக்க‌ வாய்ப்பில்லை.ஒவ்வொரு நாளும் குப்பைக‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.முத‌ல் நாள் இர‌வில் குப்பைக‌ள் ஒரு இட‌த்தில் சேரும் போது ம‌று நாள் உட‌ன‌டியாக‌ அக‌ற்ற‌ப்ப‌டுகிற‌து.இது போன்று இருக்கும் ப‌ட்ச‌த்தில் இது குறித்து உட‌ன‌டி எடுக்க‌ப்ப‌டும் மேலும் த‌ற்போது கூடுத‌ல் துப்புர‌வு ப‌ணியாள‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு உள்ளார்க‌ள்.என‌வே துப்புர‌வு ப‌ணிக‌ள் துரித‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.குறைக‌ள் இருந்தால் சுட்டி காட்டுங்க‌ள் உட‌ன‌டியாக‌ ச‌ரி செய்ய‌ ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் த‌யாராக‌ உள்ள‌து. என்றார்